
தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் வெளியாகவுள்ள சமுத்திரக்கனியின் அடுத்த படம் தான் ராமம் ராகவம். அப்பட ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனியிடம் கோலிவுட் உலகில் சாதி என்பது உள்ளதா என்று கேட்டகப்பட்டது. அதற்கு சற்றும் தாமதிக்காமல், ஆம் இருக்கிறது.
"சில இயக்குனர்கள் தங்கள் சாதியை சேர்ந்தவர்களை மட்டுமே தங்கள் பட யூனிட்டிற்குள் வைத்திருக்கிறார்கள், இது கோலிவுட் உலகில் மட்டுமல்ல, தெலுங்கு திரையுலகிலும் இது நடக்கத்தான் செய்கிறது" என்று பளிச்சென்று கூறியுள்ளார். என் மனதில் தோன்றும் கருத்துக்களை பேச தான் தயங்கியதில்லை என்றும் கூறினார்.
அதே சமயம் மலையாள சினிமாவில் இதெற்கெல்லாம் இடமே இல்லை என்று கூறி மலையாள திரையுலகை வெகுவாக பாராட்டினார். மேலும் சினிமா என்பது பல கலைஞர்களின் சங்கமம், இங்கு திறமைக்கு மட்டுமே இடம் உண்டு, ஒரு மனிதனின் திறமையை பார்த்து மட்டுமே வாய்பிளக்க வேண்டும், அவனது சாதியை பார்த்து அல்ல என்றும் கூறினார்.
இயக்குனர்கள் ஜாதி வெறியை கடைபிடிப்பது குறித்து சமுத்திரக்கனி கூறியது இப்பொது இணையத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது என்றால் அது மிகையல்ல. நெட்டிசன்கள் சில இயக்குனர்களை சுட்டிக்காட்டி கிண்டல் செய்து வருகின்றனர். சமுத்திரக்கனி நடிப்பில் உருவான ராமம் ராகவம் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.
சமுத்திரக்கனி 2003 ஆம் ஆண்டு வெளியான 'உன்னை சரணாடைந்தேன்' மூலம் இயக்குநராக அறிமுகமானார், அது ஒரு சிறந்த படமாக மாறியது. திறமையான திரைப்பட தயாரிப்பாளர் சசிகுமார் இயக்கிய 'சுப்ரமணியபுரம்' மூலம் நடிகராக மாறினார் அவர். மேலும் அந்த படத்தின் வெற்றி காரணமாக அவர் நடிப்பில் அதிக கவனம் செலுத்த துவங்கினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.