Ooty : பிரபல நடிகர் ஒருவர், உதகமண்டலத்திற்கு சென்றிருந்த நிலையில், அங்கு ஒரு பிரபல ஹோட்டலில் அவர் உட்கொண்ட உணவில் புழுக்கள் இருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியிருக்கிறார்.

தளபதி விஜயின் பிகில் மற்றும் மாயாண்டி போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் தான் நடிகர் விஜய் விஷ்வா. தொடர்ச்சியாக இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் அவர் தனது குடும்பத்தாருடன் உதகமண்டலத்திற்கு சுற்றுலாவிற்காக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் அவர் தங்கியுள்ளார். 

மேலும் அங்கு உணவு வாங்கி அவர் சாப்பிட்டுள்ளார், அப்போது தான் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்கொண்ட ஏதோ ஒரு உணவில் துர்நாற்றம் வீசுவதை கவனித்துள்ளார். பிறகு தான் அவர்கள் பயன்படுத்திய தக்காளி சாஸில் இருந்து அந்த துர்நாற்றம் வீசுவதை அவர் கண்டறிந்துள்ளார். உடனே அந்த சாஸ் இருந்த பாட்டிலை திறந்து பார்த்துள்ளார். 

கணவரின் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்ட ஷர்மிளா! உருக்கமாக அஞ்சலி செலுத்திய நண்பர்கள்!

அந்த பாட்டிலை அவர் திறந்து பார்த்தபோது அதில் புழுக்கள் நெளிந்துள்ளது. ஏற்கனவே தனது குடும்பத்தினரும் தானும் அந்த உணவை பாதி சாப்பிட்டு விட்ட நிலையில் நடிகர் விஜய் விஸ்வாவிற்கு குமட்டலும் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவர்களுக்கு உணவு பரிமாறிய செப்பிடம் இது குறித்து பேசியுள்ளார் அவர். 

ஆனால் இதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் எதுவென்றாலும் உணவ உரிமையாளர்களிடம் பேசிக் கொள்ளுமாறும் பதில் கூறியுள்ளனர். இதை கண்டு கடுப்பான நடிகர் விஜய் விஷ்வா இதை வீடியோவாக எடுத்து தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு மக்கள் தங்கள் உண்ணும் முன்பு இது போன்ற பல விஷயங்களை சரி பார்த்துவிட்டு சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Scroll to load tweet…

அவர் வெளியிட்ட வீடியோ தற்பொழுது இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. மேலும் உணவு பாதுகாப்பு துறைக்கு அழைப்பு விடுத்தும் கூட யாரும் உடனடியாக வரவில்லை என்றும் அவர் புகார் அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 9 பேர் மூச்சு திணறி பலி...வெள்ளியங்கிரி மலையில் தொடரும் அதிர்ச்சி சம்பவம்