ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 9 பேர் மூச்சு திணறி பலி...வெள்ளியங்கிரி மலையில் தொடரும் அதிர்ச்சி சம்பவம்
வெள்ளியங்கிரி மலை ஏற முற்படுபவர்கள் மூச்சு திணறி அடுத்தடுத்து உயிரழந்த சம்பவம் பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்த நிலையில், நேற்று மாலை மீண்டும் ஒருவர் திடீரென உயிரிழந்தது மலையேறுபவர்கள் மத்தியில் ஷாக் கொடுத்துள்ளது.
வெள்ளியங்கிரியில் தொடரும் மரணம்
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்து உள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் மிஞ்சூரைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது மகன் புண்ணியகோடி(46) பந்தல் அமைப்பாளராக உள்ளார்.
நேற்று மதியம் சுமார் 12 மணியளவில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 நபர்கள் கோவையை சேர்ந்த பூண்டி கோவிலுக்கு வந்து போது அடிவாரத்தில் தரிசனம் முடித்து விட்டு 10 நபர்கள் வெள்ளிங்கிரி மலை ஏற தொடங்கினர். வெள்ளிங்கிரி ஒன்றாவது மலை ஏறும் போது சுமார் 01.00 மணி அளவில் 200 படிக்கட்டுகள் ஏறிய போது திடீரென புண்ணியகோடி வயிறு வலிக்கிறது என காலைக்கடனை சென்றுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்த கைக் குழந்தை: திக்...திக்... வீடியோ!
ஒரே மாதத்தில் 9 பேர் பலி
மேலும் வாந்தி எடுத்த நபரை உடன் வந்த நண்பர்கள் கீழே அழைத்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக 05.00 மணிக்கு பூலுவபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புண்ணிய கொடியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வழியில் இறந்து விட்டதை உறுதி செய்தனர். இதனை எடுத்து உயிரிழந்த புண்ணியகோடியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் காருண்யா நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளியங்கிரி மலையில் கடந்த ஒரு மாத்த்தில் மட்டும் 8 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையில் ஏதாவது உடல்நலக்குறைபாடு ஏற்பட்டால் முதலுதவி செய்வதற்குக்கூட உபகரணங்கள் இல்லை. 5-வது மற்றும் 6-வது மலைகளில்தான் உடல்நலக்குறைபாடு ஏற்படும். அங்கு செல்போன் நெட்வொர்க் கிடைப்பது மிகவும் சிரமம் என கூறப்படுகிறது. இடையில் யாருக்காவது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் கீழே இருந்து டொலியோடு வந்து தான் அழைத்து செல்ல வேண்டிய நிலை இருப்பதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்,
வனத்துறை எச்சரிக்கை
இளைஞர்கள் ஆபத்தை உணராமல் போட்டி போட்டு, தங்களால் முடியாவிட்டாலும் நண்பர்களும் விளையாட்டாக ரிஸ்க் எடுத்துச் செல்கிறார்கள். தினசரி உடற்பயிற்சி செய்பவர்கள், வாக்கிங் செல்பவர்கள், மலை ஏற்றம் பயிற்சி எடுத்தவர்களுக்குப் எந்த பிரச்னை ஏற்படாது. மலைப்பகுதியில் ஆக்சிஜன் குறையும். புதிதாக வருபவர்களுக்கு அதுகுறித்துத் தெரிவதில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.