MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • குளு குளு ஊட்டியையும் விட்டு வைக்காத வெயில்... 73 ஆண்டுகளுக்கு பிறகு பதிவான வெப்பநிலை- சுற்றுலா பயணிகள் ஷாக்

குளு குளு ஊட்டியையும் விட்டு வைக்காத வெயில்... 73 ஆண்டுகளுக்கு பிறகு பதிவான வெப்பநிலை- சுற்றுலா பயணிகள் ஷாக்

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத வகையில் குளு, குளு இடமான ஊட்டியில் 29டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

2 Min read
Author : Ajmal Khan
Published : Apr 29 2024, 06:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

வாட்டி வதைக்கும் வெயில்

கால நிலை மாற்றம் காரணமாக வெப்பநிலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவில் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து வெயிலானது வெளுத்து வாங்குகிறது. நாட்கள் செல்ல, செல்ல சூரியன் வீட்டின் மொட்டை மாடியில் வந்து இறங்கிவிட்டதோ என்ற சந்தேகப்படும் வகையில் வீட்டிற்குள் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக வீட்டிற்குள் முடங்கிய மக்களுக்கு மேலும் வெயில் வாட்டி வதைக்கிறது.

கொளுத்தும் வெயிலில் குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்.. மழைக்கான அறிவிப்பு.! எங்கே .? எந்த பகுதியில் தெரியுமா.?
 

24

வட மாவட்டங்களில் வெப்ப அலை

இந்த நிலையில் கடந்த சிலநாட்களாக தமிழகத்தில் வெப்பநிலையானது இயல்பை விட 5 டிகிரி வரை வெப்பநிலை அதிகரித்துள்ளது. பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசிவருகிறது. ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலையி 108 டிகிரியை தொட்டுள்ளது. இந்த வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை குளு, குளு இடங்களை தேடி செல்கின்றனர். குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல் பகுதிக்கு குடும்பத்தோடு படை எடுத்து வருகின்றனர். 
 

34

ஊட்டியிலும் சுட்டெரிக்கும் வெயில்

ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஊட்டியிலும் வெப்பநிலை அதிகரித்துள்ளது. மழை மற்றும் குளுமை இல்லாமல் வெயில் அதிகரித்துள்ளது. பல இடங்களில் காட்டுத்தீயும் பற்றி எரிகிறது. இந்தநிலையில், ஊட்டியில் கடந்த 73 ஆண்டுகளில் பதிவானதை விட நேற்று அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.  ஊட்டியில் 29 டிகிரி செல்சியஸ்(84.2 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பம் பதிவாகியுள்ளது.

44

வரலாறு காணாத வெயில்

கடந்த 1951ம் ஆண்டிலிருந்து இப்போது வரை பதிவான வெப்ப நிலையில் இதுதான் மிக அதிகம் . கடந்த 73 ஆண்டுகளில் இன்றுதான் ஊட்டி மிகவும் வெப்பமான தினத்தைசந்தித்திருக்கிறது. இது தொடர்பாக அதிக வெப்பம் குறித்து ஒப்பீட்டு அட்டவணையை வெளியிட்டது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 

குறைந்த விலையில் லாடக் செல்ல அருமையான வாய்ப்பு.. ஐஆர்சிடிசி டூர் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
பள்ளி மாணவர்கள்.. அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மார்ச் 4, 10ம் தேதி விடுமுறை..
Recommended image2
சொந்த வீடும் இல்லை; காரும் இல்லை.. வெறும் ரூ.2,000-ல் வாழ்க்கை நடத்திய ஐயா நல்லகண்ணு.. அரசியலில் ஓர் அதிசயம்!
Recommended image3
அண்ணா என்ன விட்டுடுங்க ப்ளீஸ்! விடாமல் தூக்கிச் சென்ற மகேஷ்! என் வாழ்க்கையே நாசம் பண்ணிட்டான்.. தாயிடம் கதறல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved