இந்த ஆண்டு, அட்சய திருதியை அன்று பல யோகங்கள் உருவாகின்றன. இது 3 ராசிகளுக்கு மங்களகரமானதாகவும், வளமானதாகவும் இருக்கும்.
இந்து நாட்காட்டியின்படி, சித்திரை மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் திரிதியை திதியில் அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மே 10, 2024 வெள்ளிக்கிழமை அன்று அட்சய திரிதியை வருகிறது. இந்து மதத்தில் அட்சய திருதியை நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சொல்லபோனால், இந்நாள் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. சாஸ்திரங்களில் இந்த நாளில் திருமணம் செய்ய மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. குறிப்பாக லட்சுமி தேவி மற்றும் விஷ்ணு அட்சய திருதியை அன்று சிறப்பாக வழிபடப்படுவார்கள்.
இந்த நாளில் மக்கள் தங்கத்தை வாங்குவது வழக்கம். அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு அட்சய திருதியை அன்று சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பொன் போல ஜொலிக்கும் அப்படி ஒரு சுப யோகம் உருவாகிறது.
இதையும் படிங்க: அட்சய திருதியை 2024: எப்போது..? தங்கம் வாங்க நல்ல நேரம் எப்போது தெரியுமா..?
அட்சய திருதியை 2024 அன்று உருவாகும் மங்களகரமான யோகம்:
மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை அட்சய திருதியை அன்று தன யோகம் உருவாகிறது. இது 3 ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். இதனுடன் அட்சய திருதியை அன்று ரிஷப ராசியில் சந்திரனும் வியாழனும் இணைவதால் கஜகேசரி யோகமும் உருவாகும். இந்நாளில் மேஷ ராசியில் சூரியனும் சுக்கிரனும் இணைவதால் சுக்ர ஆதித்ய யோகமும் உருவாகும்.
அதுமட்டுமின்றி செவ்வாய், புதன் இணைவது தனயோகத்தையும், சனி கும்பத்தில் இருப்பது ஷஷ யோகத்தையும், செவ்வாய் மீனத்தில் இருப்பது மாளவ்ய ராஜயோகத்தையும் உருவாக்கும். அட்சய திருதியை அன்று இந்த 3 ராசிக்காரர்கள் இந்த யோகங்களால் நிறைய பலன் பெறுவார்கள். அந்த அதிஷ்ட ராசிக்காரர்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்..
இதையும் படிங்க: Akshaya Tritiya 2024: அட்சய திருதியை அன்று தவறுதலாக கூட 'இந்த' தவறுகளை செய்யாதீங்க..லட்சுமி தேவி கோபப்படுவாள்!
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை அன்று உருவாகும் தனயோகத்தால் நிதிப் பலன்கள் கிடைக்கும். அதுமட்டுமின்றி, தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். மேலும், குடும்ப வாழ்க்கைய மகிழ்ச்சியாக இருக்கும். நிலம் மற்றும் கட்டிடம் மூலம் ஆதாயம் பெறுவீர்கள்.
ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை நாள் வரப்பிரசாதமாக அமையும். பணம், வேலை, வியாபாரம் போன்றவற்றில் முன்னேற்றத்தை காண்பீர்கள். லட்சுமி தேவியின் அருளைப் பெறுவீர்கள். எதிர்காலத்தில் செய்த முதலீட்டில் நிச்சயமாக பலன் கிடைக்கும்.
மீனம்: அட்சய திருதியை அன்று உருவாகும் ஷஷ யோகம் மற்றும் மாளவ்ய யோகத்தால், மீன ராசிக்காரர்களுக்கு பணம் மற்றும் சொத்துக்களில் ஆதாயம் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி, உங்களின் மதிப்பும் மரியாதையும் கூடும். உங்கள் கடின உழைப்பின் காரணமாக முழு பலனையும் பெறுவீர்கள். சொல்லபோனால், வெற்றி உங்கள் கால்களை முத்தமிடும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D