Akshaya Tritiya 2024: அட்சய திருதியை அன்று தவறுதலாக கூட 'இந்த' தவறுகளை செய்யாதீங்க..லட்சுமி தேவி கோபப்படுவாள்!

அட்சய திருதியை நாளில் என்னென்ன தவறுகள் செய்யக்கூடாது என்பதைக் குறித்து இங்கு பார்க்கலாம்.

akshaya tritiya 2024 avoid these mistakes on akshaya tritiya otherwise goddess lakshmi angry for you in tamil mks

அட்சய திருதியை சித்திரை மாதத்தின் சுக்ல திருதியை திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அட்சய திருதியை மே 10ஆம்  தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. இந்த நாளில், மக்கள் தங்கம், வெள்ளி மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களை தங்கள் வீடுகளுக்கு வாங்குகிறார்கள். இதனால் அட்சய திருதியை அன்று சம்பாதித்த பணம் நிரந்தரமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

அதுமட்டுமின்றி, அட்சய திருதியை அன்று ஒரு நபர் எந்த வேலை செய்தாலும், அது எப்போதும் நிலைத்திருக்கும் சொல்லப்படுகிறது. ஒருபோதும் முடிவடையாது. எனவே, மக்கள் தங்கள் மகிழ்ச்சி, செழிப்பு, செல்வம் மற்றும் சொத்துக்களை அதிகரிக்க அந்நாளில் பல நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் அந்த நாளில் செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. மீறினால், லட்சுமி தேவி உங்கள் மீது கோபப்படுவாள் மற்றும் நீங்கள் சிக்கலில் சிக்கலாம். எனவே, அட்சய திருதியை நாளில் என்னென்ன தவறுகள் செய்யக்கூடாது என்பதைக் குறித்து இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க: அட்சய திருதியை 2024: எப்போது..? தங்கம் வாங்க நல்ல நேரம் எப்போது தெரியுமா..? 

2024 அட்சய திருதியை அன்று செய்யக்கூடாதவை:

  • அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும். அதுதான் உங்கள் வீட்டில் செல்வ செழிப்பை கொண்டு வரும். ஆனால், அந்நாளில் பிளாஸ்டிக், அலுமினியம் அல்லது ஸ்டீல் போன்றவற்றை ஒருபோதும் வாங்க கூடாது. நம்பிக்கைகளின்படி, அவைகளால் ராகுவால் பாதிக்கப்படுகின்றனர். இது வீட்டில் எதிர்மறை மற்றும் வறுமையை கொண்டு வரும்.
  • ஜோதிடம் படி, அட்சய திருதியை நாளில் யாருக்கும் பணத்தை கடனாகக் கொடுக்க மாட்டார்கள். இதை செய்வதன் மூலம் வீட்டில் இருக்கும் லட்சுமி தேவி நீங்கள் பணம் கொடுத்த நபரின் வீட்டிற்கு செல்கிறது என்பது இதன் பின்னணியில் உள்ள நம்பிக்கையாகும்.
  • அட்சய திருதியை நாளில் தங்கம் அல்லது தங்க நகைகளை இழப்பது அசுபமாக கருதப்படுகிறது. மேலும் இது நிதி இழப்பின் அறிகுறியாகும். ஆகையால், அட்சய திருதியை நாளில் பணத்தை ஒருபோதும் இழக்காதீர்கள். அது நல்லதாக கருதப்படுவதில்லை.
  • அட்சய திருதியையின் போது, வீட்டின் பூஜை அறையோ அல்லது பணம் வைக்கும் இடத்தையோ அழுக்காக வைக்காதீர்கள். அதுமட்டுமின்றி,  வீட்டை நன்றாக சுத்தமாக வையுங்கள். வீடு அழுக்காக இருந்தால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் நிரம்பி இருக்கும்.
  • அட்சய திருதியை நாளில், திருட்டு, பொய், சூதாட்டம் போன்ற தவறான செயல்களில் இருந்து விலகி இருங்கள். இல்லையெனில், நீங்கள் செய்த பாவங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களை துரத்தி கொண்டே இருக்கும்.
  • அட்சய திருதியை நாளில் இறைச்சி, மது, பூண்டு, வெங்காயம் போன்றவற்றை ஒருபோதும் சாப்பிட கூடாது. அதுபோல அந்நாளில், பிறரை பழிவாங்கும் விஷயங்களில் இருந்து விலகி இருங்கள்.
  • அதுபோல, அட்சய திருதியை நாளில் சங்கு, ஸ்ரீ யந்திரம், குபேர யந்திரம், விநாயகர், விஷ்ணு ஆகியோரை பேச்சின் மூலமாகவோ அல்லது செயலின் மூலமாகவோ ஒருபோதும் அவமதிக்காதீர்கள். இவை அனைத்தும் லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்தமானவை என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
  • அட்சய திருதியை அன்று வழிபாட்டின் போது லட்சுமி தேவிக்கு துளசி இலைகளை ஒருபோதும் சமர்பிக்க வேண்டாம். மீறினால், பண பிரச்சனைகள் வரும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios