srushti dange : கிளாமருக்கு மாறிய கன்னக்குழி அழகி.. ‘சிருஷ்டி டாங்கே’வின் கண்ணை கட்டும் கவர்ச்சி புகைப்படங்கள்

First Published Dec 8, 2021, 5:01 PM IST

மேகா, டார்லிங், தர்மதுரை போன்ற படங்களில் தனது இளமை துள்ளும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த சிருஷ்டி டாங்கே, தற்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சிருஷ்டி டாங்கே என்றால் பலருக்கு நினைவில் வருவது அவரின் கன்னத்தில் விழும் குழி தான். இதற்காகவே அவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். யுத்தம் செய், டார்லிங், மேகா ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

மேகாவில் பாவாடை தாவணியில் அழகு தேவையாக வந்து மனதை கவர்ந்தார். டார்லிங் மற்றும் தர்மதுரை படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை உருக வைக்கும் நடிப்பும் ரசிகர்களை சுண்டி இழுத்தது. 

அர்ஜுன் தொகுத்து வழங்கும் அட்வெஞ்சர் நிகழ்ச்சியான சர்வைவரிலும் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார் சிருஷ்டி டாங்கே.

முன்னணி நடிகையாக சிருஷ்டியை திரையில் பார்க்க வேண்டுமென ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதனால் பட வாய்ப்புகளை தட்டித்தூக்க அம்மணியும் விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். 

ஆரம்பத்தில் அதிகமாக கவர்ச்சி இன்றி போட்டோக்களை வெளியிட்டு வந்த சிருஷ்டி டாங்கே தற்போது கண் கூசும் அளவிற்கு கவர்ச்சி காட்டி வருகிறார். ‘தாவணி போட்ட தீபாவளியாக’ மனதை வருடியவர் இப்படி மாறிவிட்டாரே என ரசிகர்கள் வருத்தில் உள்ளனர். 

தற்போது வெள்ளை நிற கவுன் அணிந்தபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார். அந்த புகைப்படத்துக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.

click me!