கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் இணைந்த இரு பாலிவுட் பிரபலங்கள்! வெளியான தகவலால் கூடும் எதிர்பார்ப்பு!

First Published Apr 30, 2024, 9:23 PM IST

உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் 'தக் லைஃப்' படத்தில் இரண்டு புதிய பாலிவுட் பிரபலங்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

'நாயகன்' படத்தின் வெற்றிக்கு பின்னர், மீண்டும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் இணைந்து நடிக்க உள்ள திரைப்படம் 'தக் லைஃப்'. இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் மிகவும் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் இணைந்துள்ள இரண்டு பாலிவுட் நட்சத்திரங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Maniratnam

‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன்பே... கமல்ஹாசனின் கதாபாத்திரம் குறித்து தெரிவிக்கும் விதத்தில் படக்குழு புதிய டீசர் ஒன்றை வெளியிட்டு, படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

Mrunal Thakur: நான் அப்படி நடிப்பதை பெற்றோர் விரும்பவில்லை! பல பட வாய்ப்புகளை இழந்தேன் மிருணாள் தாக்கூர்!
 

Nayagan

மேலும் கமல்ஹாசன் தன்னுடைய மற்ற படங்களிலும், அரசியல் பணியிலும் ஈடுபட்டு வந்ததால்... படப்பிடிப்பு துவங்கும் என தெரிவிக்கப்பட்ட நாளில் துவங்காமல் தாமதமாகவே துவங்கியுள்ளது. இதன் காரணமாக இப்படத்தில் கமிட் ஆன, துல்கர் சல்மான், ஜெயம் ரவி போன்ற நடிகர்கள் இப்படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் கூறப்பட்டது.
 

Simbu, Kamal

 எனவே இந்த படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் ஆகியோர் புதிதாக கமிட் ஆகி உள்ளதாக கூறப்பட்டது. இவர்களை தவிர திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க உள்ளனர்.

Jai Marriage: இளம் நடிகையோடு திடீர் திருமணம்? ஹனி மூன் கிளம்பிய ஜெய்... அவரே வெளியிட்ட புகைப்படம் வைரல்!
 

Maniratnam

பல பிரபலங்கள் நடித்து வரும் இந்த படத்தில்,  தற்போது இரண்டு பாலிவுட் பிரபலங்கள் இணைந்துள்ளனர். அதன்படி தற்போது வெளியாகியுள்ள தகவலில், பிரபல பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி மற்றும் பாலிவுட் நடிகர் அலிபாசல் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. 
 

click me!