உள்ளாடை போடாமல்... சட்டை பட்டனை கழட்டிவிட்டு உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து கதிகலங்க வைத்த பூஜா ஹெக்டே

First Published Jun 19, 2022, 10:21 AM IST

pooja hegde : உள்ளாடை எதுவும் போடாமல், சட்டை பட்டனை கழட்டி விட்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பீஸ்ட், ராதே ஷ்யாம், ஆச்சார்யா ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தன. இருந்தபோதும் அவரது காட்டில் பட மழை பொழிந்த வண்ணம் உள்ளது. தற்போது கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பான் இந்தியா நடிகையாக ஜொலித்து வருகிறார்.

இந்தியில் ரீமேக் ஆகும் அஜித்தின் வீரம் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. இதுதவிர பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பான் இந்தியா படமான ஜன கன மன படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் பூஜா ஹெக்டே. இப்படத்திற்காக அவருக்கு ரூ.5 கோடிக்கு மேல் சம்பளமாக கொடுக்கப்பட்டு உள்ளதாம்.

இதுதவிர கேஜிஎப் நடிகர் யாஷ் நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவை படக்குழு அணுகி உள்ளதாகவும், அந்த படத்தின் கதை பிடித்துப்போனதால் அவர் அதற்கு ஓகே சொல்லிவிட்டதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. இவ்வாறு டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது பூஜா ஹெக்டேவின் கெரியர்.

பிசியான நடிகையாக வலம் வந்த போதிலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே, அதில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது உள்ளாடை எதுவும் போடாமல், சட்டை பட்டனை கழட்டி விட்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... பல் வலிக்காக சிகிச்சைக்கு போன நடிகை.. பலூன் போல் வீங்கிய முகத்துடன் திரும்பி வந்த சோகம் - என்ன நடந்தது?

click me!