கிழிந்த டவுசருடன் நடுரோட்டில் தொடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து அதகளப்படுத்திய பூஜா ஹெக்டே - வைரல் போட்டோஸ்

First Published Aug 9, 2022, 9:19 AM IST

Pooja hegde : நியூயார்க் சென்றுள்ள நடிகை பூஜா ஹெக்டே, அங்குள்ள தீம் பார்க் அருகே நடு ரோட்டில் கிழிந்த டவுசர் அணிந்து பளீச் என தொடையை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ரிலீசான முகமூடி படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இப்படம் பிளாப் ஆனதால் டோலிவுட் பக்கம் சென்ற இவர் அங்கு அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனார். குறுகிய காலத்திலேயே அங்கு முன்னணி ஹீரோயினாகவும் உயர்ந்தார்.

டோலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வரும் பூஜா ஹெக்டே, அண்மையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் மூலம் மீண்டும் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். இந்த முறையும் அவருக்கு தோல்வியே மிஞ்சியது. கடந்த சில வருடங்களுக்கு முன் ராசியான ஹீரோயின் என பெயரெடுத்த பூஜா ஹெக்டே, தற்போது ராசியில்லாத ஹீரோயினாக வலம் வருகிறார்.

இதற்கு காரணம் சமீப காலமாக இவர் நடித்த படங்கள் அனைத்தும் பிளாப் ஆனது தான். இந்த ஆண்டு இவர் நடிப்பில் ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. அந்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் பிளாப் ஆகியதால் தான் அவரை ராசியில்லாத ஹீரோயின் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்....நடிக்கும் படமெல்லாம் ஹிட்... சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்தி தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ராஷ்மிகா

இருப்பினும் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தபாடில்லை. தற்போது இவர் கைவசம் சர்கஸ், சல்மான் கான் ஜோடியாக கபி ஈத் கபி தீபாவளி மற்றும் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஜன கன மன ஆகிய பெரிய பட்ஜெட் படங்கள் உள்ளன. இதுதவிர சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவும் பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே, தற்போது வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது நியூயார்க் சென்றுள்ள அவர் அங்குள்ள தீம் பார்க் அருகே நடு ரோட்டில் கிழிந்த டவுசர் அணிந்து பளீச் என தொடையை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்....viruman : ஷங்கர் மகளுக்காக பிரபல பாடகி பாடிய பாடலையே தூக்கிய யுவன்... விருமன் படத்தில் நடந்த கோல்மால் வேலை

click me!