அடேங்கப்பா! இன்வெர்ட்டரையே மிஞ்சும் பவர் பேங்க்! அசத்தும் ஆம்பிரேன் PowerHub 300!

First Published | Apr 30, 2024, 11:25 PM IST

கோடையில் மின் நுகர்வு அதிகரித்து வருவதால் மின்வெட்டும் அதிகரித்துவிட்டது. மின்சாரம் இல்லாத நேரத்தில் இன்வெர்ட்டர் பயன்படுத்துகிறார்கள். அதற்கு வசதி இல்லாதவர்களும் அவசர தேவைக்கு பவர் பேங்க் ஒன்றை பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஆம்பிரேன் நிறுவனம் இந்த இரண்டின் பயனையும் கொடுக்கும் பவர்ஹப் ஒன்றைக் கொண்டுவந்துள்ளது.

Ambrane Powerhub 300

ஆம்பிரேன் நிறுவனத்தின் புதிய பவர் பேங்க் பவர் கட் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக உள்ளது. பவர்ஹப் (PowerHub 300) என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த பவர் பேங்க் 90,000mAh பேட்டரி பேக் கொண்டது.

300W ஆற்றல் கொண்டதாக இருந்தாலும் இதன் எடை அதிகம் இல்லை. வெறும் 2.6 கிலோ மட்டுமே எடை கொண்டிருப்பதால் வெளியூர் பயணங்களின் போதும் இதனை எடுத்துச் செல்லலாம்.

Ambrane Powerhub 300

ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் இந்த ஆம்பிரேனின் பவர் பேங்க் மூலம் மினி ஃப்ரிட்ஜ் ஒன்றை சுமார் 6 மணிநேரம் இயக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மின்விசிறியையும் 6 மணிநேரம் பயன்படுத்தலாம். 2 மணி நேரம் டிவி பார்க்க முடியும்.

பவர் பேங்கில் 8 அவுட்புட் போர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது ஒரே நேரத்தில் 8 சாதனங்களை இத்துடன் இணைந்து சார்ஜ் செய்யலாம். இந்த பவர் பேங்க் 60W சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது.

Tap to resize

Ambrane Powerhub 300

ஆம்பிரேன் பவர்ஹப் 300 பவர் பேங்க் விலை ரூ.21,000 எனக் குறிப்பிட்டப்பட்டுள்ளது. அறிமுகச் சலுகையாக இதை ரூ.19,999க்கு வாங்க முடியும். பிளிப்கார்ட், அமேசான் தளங்களிலும் இந்த பவர் பேங்க் கிடைக்கிறது.

ஒரு இன்வெர்ட்டர் அதன் பேட்டரியுடன் சேர்த்து ரூ.20,000 - ரூ.25,000 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இன்வெர்ட்டரின் அளவும் பெரிதாக இருக்கும். வேறு எங்கும் எடுத்துச் செல்லவும் முடியாது. ஆனால், ஆம்பிரேனின் இந்த பவர்ஹப் 300 எளிதாக எங்கும் எடுத்துச் செல்லலாம். இன்வெர்ட்டருக்கு சவால் விடும் செயல்திறனும் கொண்டிருக்கிறது.

Latest Videos

click me!