கோடையை கூலாக்கும் சியோமியின் மிஜியா வெர்ட்டிகிள் ஏசி! எந்த இடத்திலும் வைத்து பயன்படுத்தலாம்!

First Published Apr 30, 2024, 8:19 PM IST

சியோமி நிறுவனம் புதிய வெர்ட்டிகிள் ஏசி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த 3 டன் ஏர் கண்டிஷனரை எளிதாக எந்த இடத்திலும் வைத்து பயன்படுத்த முடியும். இதன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

Xiaomi unveils new Mijia 3-ton vertical air conditioner

சியோமி மிஜியா ஏர் கண்டிஷனர் ஃபிரெஷ் ஏர் ப்ரோ டூயல் அவுட்லெட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வழக்கமான ஸ்ப்ளிட் ஏசி, விண்டோ ஏசி போன்றது அல்ல. இந்த ஏசி டவர் ஃபேன் போல செங்குத்தாக நிற்கும்.

Xiaomi unveils new Mijia 3-ton vertical air conditioner

சியோமியின் மிஜியா வெர்ட்டிகிள் ஏசி வீட்டில் பயன்படுத்த சுவரில் துளையிட்டு மாட்டி வைக்க வேண்டாம். அறையில் தேவையான இடத்தில் செங்குத்தாக நிற்க வைத்து பயன்படுத்தலாம் என்பது இதன் முக்கிய சிறப்பு அம்சம்.

Xiaomi unveils new Mijia 3-ton vertical air conditioner

சில்வர் கலரில் வெளிவரும் இந்த மிஜியா வெர்ட்டிக்கல் ஏசி தரமான கூலிங்கை கொடுக்கிறது. டூயல் அவுட்புட் இருப்பதால் வேகமாக குளிர்ச்சியை அளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

Xiaomi unveils new Mijia 3-ton vertical air conditioner

3 டன் திறன் கொண்ட ஏசி 1930W குளிரூட்டும் சக்தி மற்றும் 2680W வெப்பமூட்டும் சக்தி இரண்டும் கொண்டிருக்கிறது.  கிளாஸ் 1 எனர்ஜி சேவிங் அம்சமும் உள்ளதால் குறைந்தபட்ச அளவுக்கே மின்சாரத்தை பயன்படுத்தும். எனவே மின்கட்டணம் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

Xiaomi unveils new Mijia 3-ton vertical air conditioner

சூழலுக்கு ஏற்ப குளிர்ச்சியை வழங்கும். கூலிங்கை தானாகவே மாற்றி அமைத்துக்கொள்ளும் திறனும் இந்த ஏசியில் இருக்கிறது. தானாகவே ஆன் அல்லது ஆஃப் செய்யும் வசதியும் உள்ளது. சீனாவில் மே மாதம் அறிமுகமாகும் இந்த ஏசியின் விலை இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!