அடுத்த அதிரடிக்கு ரெடியாகும் ஆப்பிள்! ஐபாட் புதிய மாடல்களில் வரப்போகும் ஸ்பெஷல் அப்டேட்!

First Published | Nov 13, 2023, 7:07 PM IST

ஆப்பிள் தனது ஐபாட் (iPad) மாடல்களை அடுத்த ஆண்டு மேம்படுத்தும் என்றும் அதில் புதிய பிராசஸர் மற்றும் டிஸ்பிளே இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்பிள் தற்போதைய ஐபாட் (iPad) மாடல்களை அடுத்த ஆண்டு மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கெனவே நிறைய தகவல்கள் வெளிவந்துள்ளன. இப்போது, ​​2024 ஐபாட் சீரிஸில் முக்கிய அப்டேட்டுகள்ள இருக்கும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

2024ஆம் ஆண்டில் ஆப்பிள் வெளியிடும் மேம்படுத்தப்பட்ட iPad மாடல்களில் M3 பிராசஸர் மற்றும் OLED டிஸ்ப்ளே இடம்பெறும் என்று சொல்லப்படுகிறது.

கோவிட்-19 தொற்று காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் (WFH) பணியாளர்களால் ஐபாட் ஏற்றுமதி அதிகரித்து. ஆனால், 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு அது குறையத் தொடங்கியிருக்கும் சூழலில் ஆப்பிள் புதிய அப்டேட்களுக்குத் தயாராகி வருகிறது.

Tap to resize

பொழுதுபோக்கு மற்றும் செயல்திறன் அம்சங்கள் காரணமாகவும் ஐபாட்களின் தேவை குறைந்து என்றும் சொல்லப்படுகிறது.

2024 இல் iPad ஏற்றுமதிகள் 52 முதல் 54 மில்லியன் யூனிட்டாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2022 இல் சுமார் 63 மில்லியன் யூனிட்டுகள் ஏற்றுமதியான நிலையில், 2023 இல் இந்த எண்ணிக்கை சுமார் 50 மில்லியனாக சரிந்துள்ளது.

ஆப்பிள் 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 10.9 இன்ச் மற்றும் 12.9 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இரண்டு ஐபேட் ஏர் மாடல்களை அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது.

12.9-இன்ச் ஐபாட் ஏர் தற்போது உள்ள ஐபாட் ப்ரோ மாடல்களின் அதே அம்சங்களுடன் இருக்கும் என்று கூறப்படுகிறது. 10.9-இன்ச் ஐபேட் ஏர் மாடலை விட சிறந்த டிஸ்ப்ளேயுடன் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Latest Videos

click me!