New Apple Pencil Launch Date
ஆப்பிளின் புதிய பென்சில் 3வது ஜெனரேஷன் பென்சில் அல்ல. இந்த பென்சில் USB-C வேரியண்டாகவே அறிமுகமாக உள்ளது. இந்த பென்சிலை நவம்பர் தொடக்கத்தில் முன்பதிவு செய்யலாம்.
ஆப்பிள் இதுவரை இரண்டு பென்சில்களை அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் பென்சில் விலை ரூ.9,500, இரண்டாவது பென்சில் விலை ரூ.11,900. ஆனால், புதிய USB-C வசதியுள்ள ஆப்பிள் பென்சிலின் விலை ரூ.7,900 மட்டுமே.
Apple Pencil USB-C
புதிய ஆப்பிள் பென்சிலில் உள்ள USB-C போர்ட் பென்சிலை சார்ஜ் செய்வதற்கும் ஐபாட்களுடன் இணைந்து பயன்படுத்தவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய ஆப்பிள் பென்சிலை ஐபாட் பக்கத்தில் காந்தம் மூலம் இணைத்து வைக்க முடியும். 2வது ஜெனரேஷன் பென்சில் போல ஐபாடில் அதே இடத்தில் காந்தம் மூலம் இணைத்து வைக்கலாம். ஆனால் இப்படி ஒன்றாக இணைத்து வைப்பதால் சார்ஜ் செய்யவோ, ஐபாட் உடன் பயன்படுத்தும்படி கனெக்ட் செய்யவோ முடியாது.
Apple Pencil with USB-C price
புதிய ஆப்பிள் பென்சில் USB-C போர்ட் கொண்ட அனைத்து ஐபாட்களுடனுடன் சேர்த்து பயன்படுத்தக்கூடியது என்பதை ஆப்பிள் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது கிடைக்கும் மலிவு விலை ஐபோட் உடன் புதிய பென்சிலை பயன்படுத்த முடியாது. அதில் USB-C போர்ட்க்குப் பதிலாக லைட்னிங் போர்ட் தான் உள்ளது.
வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் கனெக்டிவிட்ட அம்சம் இல்லை என்பது புதிய ஆப்பிள் பென்சில் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு. பென்சில் கேப் உள்ளே இருக்கும் USB-C போர்ட் மூலம் தான் இணைக்கவும் சார்ஜ் செய்யவும் முடியும்.
Apple Pencil USB-C specs
USB-C போர்ட் வடிவமைப்பில் பெரும்பாலும் முந்தைய பென்சில் போலவே உள்ளது. அதே போன்ற முனை வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஐபாட்களுடன் இணைப்பதற்கான தட்டையான பக்கமும் மேட்-பினிஷ் அமைப்பும் உள்ளது.
முந்தைய ஆப்பிள் பென்சில் போல் இல்லாமல், புதிய ஆப்பிள் பென்சிலின் பேட்டரி ஆயுளை மேம்படுத்த, ஸ்லீப் மோட் (Sleep mode) அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. பென்சிலை ஐபாடில் காந்தம் மூலம் இணைத்து வைத்தவுடன் இந்த ஸ்லீப் மோட் தானாகவே செயல்படுத்தப்படும்.
USB-C Apple Pencil in India
புதிய USB-C ஆப்பிள் பென்சில் மற்ற இரண்டு பென்சில்களைப் போலவே அதே துல்லியம், விரைவு மற்றும் உணர்திறன் ஆகியவற்றைக் கொண்டது என்று ஆப்பிள் கூறுகிறது. அடிப்படை அம்சங்களைத் தவிர, iPad Pro மாடல்களுடன் பயன்படுத்தும்போது ஹோவர் செயல்பாட்டையும் ஆதரிக்கிறது.
இது மிகவும் மலிவான ஆப்பிள் பென்சில் என்றாலும், பிரஷர் சென்சிடிவிட்டி, டபுள் டாப் டூ சேஞ்ச டூல் போன்ற பயனுள்ள அம்சங்கள், ப்ரீ என்கிரேவிங் போன்ற அம்சங்கள் USB-C ஆப்பிள் பென்சிலில் கிடையாது. ஆப்பிள் பென்சில் USB-C இருந்தாலும் இணைப்புக்கு உதவும் சார்ஜிங் கேபிள் எதுவும் கிடையாது.