பவர் ஃபுல் பிராசஸர், கிராபிக்ஸ் அம்சங்களுடன் லெனோவோ LOQ கேமிங் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்!

First Published | Aug 2, 2023, 11:59 AM IST

லெனோவோ LOQ கேமிங் லேப்டாப் சீரிஸ் இந்தியாவில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. சமீபத்தில் லெனோவோ அறிமுகப்படுத்திய Yoga Book 9i மற்றும் Legion Pro சீரிஸ் லேப்டாப்களைத் தொடர்ந்து இந்த LOQ கேமிங் லேப்டாப் சீரிஸ் இந்தியாவில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

லெனோவோ LOQ சீரிஸ் லேப்டாப்

இந்த LOQ சீரிஸ் லேப்டாப்களில் 16GB DDR5 ரேம் மற்றும் 512GB SSD ஹார்டு டிஸ்க் உடன் இந்த லேப்டாப்கள் கிடைக்கின்றன. LOQ சீரீஸ் இன்டெல் (13th Gen Intel Core) அல்லது ஏ.எம்.டி. பிராசஸர் (AMD Ryzen 7000) மூலம் இயக்கப்படுகிறது, NVIDIA GeForce RTX 4060 கிராபிக்ஸ் கொடுக்கப்படுகிறது.

கிரே (Storm Gray) கலரில் கிடைக்கும் LOQ 15 லேப்டாப் இந்தியாவில் மூன்று வேரியண்ட்களில் விற்கப்படுகிறது. 12th Gen Intel Core i5 மற்றும் NVIDIA GeForce RTX 3050 கொண்ட லேப்டாப் ரூ.78,990 கிடைக்கும். அதே பிராசஸருடன் NVIDIA GeForce RTX 4050 கொண்டது ரூ. 92,990 விலையிலும், NVIDIA GeForce RTX 4060 GPU கொண்டது ரூ.97,990 விலையிலும் கிடைக்கும்.

13th Gen Intel Core i7 பிராசஸருடன் NVIDIA GeForce RTX 4050 கிராபிக்ஸ் கொண்ட லெனோவோ LOQ 15 லேப்டாப்பை ரூ. 99,990 விலைக்கு வாங்கலாம். NVIDIA GeForce RTX 4060 கிராபிக்ஸ் கொண்ட லேப்டாப் விலை ரூ.1,14,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ப்ளிப்கார்ட்டில் லெனோவோ LOQ

இதற்கிடையில், ரைசென் பிராசஸர் கொண்ட லேப்டாப்களும் உள்ளன. Ryzen 7 Octa Core 7840HS பிராசஸருடன் கூடிய லெனோவோ LOQ லேப்டாப்கள் NVIDIA GeForce RTX 3050 மற்றும் NVIDIA GeForce RTX 4050 உடன் கிடைக்கிறது. அவற்றின் விலை முறையே ரூ.87,990 மற்றும் ரூ.99,990 ஆக உள்ளன.

அனைத்து புதிய லெனோவோ LOQ மாடல்களும் தற்போது ப்ளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்த LOQ சீரீஸ் விரைவில் லெனோவா இணையதளத்திலும் கடைகளிலும் விற்பனைக்கு வரும் என்றும் லெனோவோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tap to resize

ஸ்டீரியோ ஸ்பீக்கர்

லெனோவோ LOQ சீரீஸ் 15.6-இன்ச் WQHD (2560 x 1440 பிக்சல்கள்) IPS டிஸ்ப்ளே, 8GB DDR5 ரேம் மற்றும் 512GB PCIe NVMe SSD ஹார்டு டிஸ்க் கொண்டிருக்கின்றன. LOQ 15 2023 சீரிஸ் லேப்டாப்களில் கேமிங் ஆடியோவுடன் மேம்படுத்தப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் கேமிங் பிரியர்களைக் கவர்கின்றன.

சூப்பர் ரேபிட் சார்ஜ் வசதி கொண்ட 60Wh பேட்டரி, பேக் லைட் கொண்ட கீபோர்டு ஆகியவையும் உள்ளன. லெனோவோ LOQ சீரீஸ் லேப்டாப்களின் எடை 2.4 கிலோ இருக்கிறது.

Latest Videos

click me!