குறைந்த விலையில் சூப்பரான 5 ஸ்மார்ட்வாட்ச்.. அதிரடி ஆஃபரை மிஸ் பண்ணிடாதீங்க !!

First Published | Jun 6, 2023, 11:49 PM IST

முன்னணி ஸ்மார்ட்வாட்ச் பிராண்டுகளின் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் அமேசானில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள், சாம்சங், நைஸ் போன்ற புகழ்பெற்ற பிராண்டுகளின் ஸ்மார்ட்வாட்ச்களை 70 சதவீதம் வரை தள்ளுபடியுடன் உங்கள் கைகளில் பெறுவதற்கான பொன்னான வாய்ப்பை தமிஸ் பண்ணிடாதீங்க. Amazon sale மூலம் தற்போது குறிப்பிடத்தக்க தள்ளுபடியில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்வாட்ச் பிராண்டுகளின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy Watch 4 விலை ரூ 11,990 ஆகும். இந்த ஸ்மார்ட்வாட்ச் 90 க்கும் மேற்பட்ட பல்வேறு உடற்பயிற்சிகளையும் கண்காணிக்கும். அதிநவீன உடற்பயிற்சி கண்காணிப்பு அம்சங்களுடன் வருகிறது. புளூடூத் அழைப்பு வசதியுடன், உங்கள் தொலைபேசியை அணுகாமல் உங்கள் மணிக்கட்டில் இருந்து நேரடியாக அழைப்புகளுக்கு நீங்கள் சிரமமின்றி பதிலளிக்கலாம். உங்களுக்கு தேவையான அனைத்தும் உங்கள் விரல் நுனியில் உள்ளது.

Tap to resize

boAt Xtend Smartwatch விலை ரூ 2,699 ஆகும். இந்த ஸ்மார்ட்வாட்ச் அலெக்சாவுடன் வருகிறது. 1.54-இன்ச் திரையைக் கொண்டுள்ளது. தூசி மற்றும் வியர்வை எதிர்ப்பிற்கான 5 ஏடிஎம் மதிப்பீட்டில், இந்த ஸ்மார்ட்வாட்ச் உங்கள் உடற்பயிற்சிக்கு எளிதாக இருக்கும்.

Apple Watch SE (ஆப்பிள் வாட்ச் எஸ்இ) விலை ரூ 31,400 ஆகும்.  நீட்டிக்கப்பட்ட பேட்டரி ஆயுள் மற்றும் பிரீமியம், ஸ்டைலான வடிவமைப்பு ஆகியவற்றில் ஆப்பிள் பக்காவான அம்சங்களுடன் வருகிறது. இது அவசரகால SOS போன்ற மேம்பட்ட செயல்பாடுகளிலும் சிறந்து விளங்குகிறது. மூன்று வண்ணங்களில் இது கிடைக்கிறது.

Noise ColorFit Smartwatch விலை ரூ 1,299 ஆகும். சிறந்த ஸ்மார்ட்வாட்ச் பிராண்டுகளில் குறைந்த விலையில் இது வருகிறது. 1.69-இன்ச் திரை, 60 விளையாட்டு முறைகள் மற்றும் 150 வாட்ச் பேஸ் என பல அட்டகாசமான வசதிகளுடன் வருகிறது. இதயத் துடிப்பை 24/7 கண்காணிக்கவும், மன அழுத்த அளவைக் கண்காணிக்கவும், இரத்த ஆக்ஸிஜன் அளவை அளவிடவும், தூக்க முறைகளை கண்காணிக்கவும், உங்கள் மாதவிடாய் சுழற்சியை எளிதாகக் கண்காணிக்கவும் உதவுகிறது.

Fire-Boltt Ninja 3 விலை ரூ 1,099 ஆகும். ஃபயர்-போல்ட் என்பது அமேசான் சேல் மூலம் குறைந்த விலையில் கிடைக்கும் மற்றொரு சிறந்த ஸ்மார்ட்வாட்ச் பிராண்ட் ஆகும். இந்த ஸ்மார்ட்வாட்ச் தூசி, கசிவுகள், மழைத்துளிகள் மற்றும் வியர்வை ஆகியவற்றை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது, 60 விளையாட்டு முறைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட கிளவுட்-அடிப்படையிலான வாட்ச் முகங்களுடன், இது பல்வேறு விருப்பங்கள் மற்றும் செயல்பாடுகளை வழங்குகிறது.

இதையும் படிங்க..iPhone 11 வெறும் ரூ.8,950க்கு கிடைக்கிறது! இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காது - முழு விபரம் !!

Latest Videos

click me!