SmartWatch : ஸ்மார்ட்வாட்ச் வாங்க போறீங்களா? ரூ.1,500 முதல் ரூ.5,000 சிறந்த ஸ்மார்ட்வாட்சகள்!

First Published | Mar 6, 2023, 12:41 PM IST

புதிதாக ஸ்மார்ட் வாட்ச் வாங்கும் எண்ணம் உள்ளதா? அல்லது நெருங்கிய அன்பர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் கிஃப்டாக வழங்க விரும்புகிறீர்களா?  ரூ.1,500 முதல் ரூ.5,000 வரையிலான சிறந்த ஸ்மார்ட் வாட்ச்களின் விவரங்களை இங்குக் காணலாம். 
 

Noise Colorfit Pro 4
விலை: ரூ 2,999
நீங்கள் சிறந்த தோற்றமுள்ள ஸ்மார்ட்வாட்சை விரும்பினால், இந்த பட்ஜெட்டின் கீழ் Noise Colorfit Pro 4 பார்க்கலாம். இது 8 வகையான நிறங்களில்  வருகிறத. அவற்றில் டீப் ஒயின் கலர் மாடல் நல்ல பிரீமியம் தோற்றத்தில் தெரிகிறது. மெசேஜ்களை எளிதாகப் படிக்கவும், பிற விவரங்களைப் பார்க்கவும் பிரகாசமான டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.  நீங்கள் வாட்ச் முகப்புகளை மாற்றலாம், ஸ்மார்ட்வாட்சிலிருந்து நேரடியாக வாய்ஸ்கால் பெறலாம். அதற்கு ஏற்ப நல்ல ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோஃபோன் உள்ளது.
 

ஃபயர்போல்ட் ராக்கெட்
விலை: ரூ.2,499
வட்ட வடிவத்தில் வாட்ச் விரும்புகிறவ்களாக இருந்தால் Fireboltt Rocket கருத்தில் கொள்ளலாம். இது கையில் மாட்டுவதற்கு அழகாக இருக்கிறது, பிரீமியம் தோற்றத்தை தருகிறது. ஒரு FHD டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது வீட்டினுள்ள இருக்கும் போதும், வெளியில் வெயியலில் செல்லும் போதும் கூட நல்ல  பிரகாசமாக இருக்கும். 

இதய துடிப்பு கண்காணிப்பு, உறங்கும் நேரம் கண்காணிப்பு, ஆக்ஸிஜன் நிலை கண்காணிப்பு, மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு என 100 க்கும் மேற்பட்ட அம்சங்கள் உள்ளன. IP67 ரேட்டிங்கும் இருப்பதால் லேசான மழை, வேர்வை துளி, தண்ணீர் துளி பட்டாலும் வாட்ச் பாதிப்படையாது. உங்கள் ஃபோன் இல்லாத போது உங்கள் செய்திகள் அல்லது அறிவிப்புகளை நீங்கள் பார்க்கலாம். ஆனால் நீங்கள் கால் செய்ய முடியாது, யார் கால் செய்கிறார்கள் என்பதை மட்டுமே உங்களால் சரிபார்க்க முடியும்.
 

Tap to resize

சென்ஸ் எடிசன் 1
விலை: ரூ 1,699
சென்ஸ் எடிசன் 1 என்பது புளூடூத் கால் சப்போர்ட் கொண்ட மிகவும் மலிவான வாட்ச் ஆகும். இப்போது, ​​உங்களில் பெரும்பாலானோர் சென்ஸ் கம்பெனியைப் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள், ஏனெனில் இந்தியாவில் ஸ்மார்ட்வாட்ச்களை உருவாக்கும் புதிய நிறுவனம். ஆனால் நான் இந்த ஸ்மார்ட்வாட்ச் நல்ல செயல்திறன் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.  

விரைவில் மலிவு விலை Oneplus Nord CE 3 அறிமுகம்? விலை, சிறப்பம்ச விவரங்கள் லீக்!

இது உங்கள் இதய துடிப்பு, ஆக்ஸிஜன் அளவு, உறங்கும் நேரம் சுழற்சி, அடிப்படை வெளிப்புற செயல்பாடுகளை ட்ராக் முடியும். இதில் டிஸ்ப்ளே சிறப்பாக இருக்காது. ஆனால் போதுமான அளவில் வெளிச்சம் கொண்டது. உங்கள் மொபைலுடன் இந்த வாட்ச்சை இணைத்தவுடன், மெசேஜ் படிக்கலாம், கால் செய்யலாம் மற்றும் காலில் கலந்துகொள்ளலாம். மேலும், அதன் மைக் சத்தமாகவும் தெளிவாகவும் . ஆக, ஒட்டுமொத்தமாக, 1,700 ரூபாய்க்கு இது ஒரு நல்ல வாட்ச் தான்.

Realme Techlife வாட்ச் R100
விலை: ரூ 3,999
ரியல்மி டெக் லைஃப் வாட்ச் R100 என்ற மாடலானது வெறும் 4 ஆயிரம் ரூபாய்க்கு வருகிறது. இந்த பட்ஜெட்டில் வாய்ஸ்ஸ் கால் கொண்ட நல்ல ஸ்மார்ட்வாட்ச் ஆகும். இதிலுள்ள மைக்ரோஃபோன் நல்ல தரம் வாய்ந்ததாக உள்ளது. அதே போல், கால் வரும் போது ஸ்பீக்கர் சத்தமும் நல்ல உரத்த சத்தமாக ஒலிக்கிறது. 
 

ஒன்பிளஸ் நார்ட் வாட்ச்
விலை: ரூ 4,999
கடைசியாக OnePlus Nord வாட்ச் கருத்தில் கொள்ளலாம். இந்த வாட்ச்சில் நேரடியாக கால் அட்டண்ட் செய்ய முடியாது. நீங்கள் மெசேஜ்களைப் பார்க்கலாம், கால் வருகிறதா என்று பார்க்கலாம். அவ்வளவு தான். இதில் சிறந்த அமோலெட் டிஸ்ப்ளே, நல்ல டச் ரெஸ்பான்ஸ் உள்ளன. மற்ற பட்ஜெட் ஸ்மார்ட்வாட்ச்களை விட சிறந்தது. இதன் பேட்டரி ஆயுளும் திடமானது மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒரு வாரத்திற்கு மேல் நீடிக்கும்.
 

Latest Videos

click me!