1. Nubia Pad 3D
நுபியா பேட் 3டி என்பது நோட்பேட் பிரியர்களுக்காக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள முப்பரிமாண நோட்பேட் ஆகும். இது கிட்டத்தட்ட 3டியில் எழுத்துக்கள், படங்கள், வீடியோக்களைப் பார்க்கக்கூடிய டேப்லெட் என்றே சொல்லலாம். அதுவும் 3D கண்ணாடிகள் இல்லாமலே பார்க்கலாம்.
இந்த டேப்லெட்டில் 12.4-இன்ச் அளவிலான டிஸ்ப்ளே, டிஃப்ராக்டிவ் லைட்ஃபீல்ட் பேக்லைட்டிங் லேயருடன் (DLB) வருகிறது. இதில் எளிமையான முறையில், முப்பரிமாண கோணத்தில் வீடியோக்களை மாற்றிக் கொடுக்கிறது. அதற்காக டிஸ்ப்ளேக்கு அருகில் சென்சார்கள் உள்ளன, அவை நீங்கள் பார்க்கும் கோணத்தை கண்டறிந்து அதற்கேற்ப 3D எஃபெக்ட்டை வழங்குகிறது.
டேப்லெட்டில் டூயல் கேமராக்கள் உள்ளன. பின்புறத்தில் 16 மெகாபிக்சல் கேமராக்கள் அடங்கிய டூயல் கேமராவும், முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமராவும் உள்ளன. இவை அனைத்தும் 3D படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்க உதவுகிறது. டேப்லெட்டை வழக்கம் போல் இயக்கலாம். எதிர்பாரத அளவில் இந்த நோட்பேடில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 888 பிராசசர் உள்ளது. இது நல்ல திறன்வாய்ந்த பிராசசர் ஆகும்.