ரூ.80 ஆயிரத்துக்கும் குறைவான பட்ஜெட்டில் இருக்கும் டாப் 5 லேப்டாப்கள் - முழு விபரம்

First Published | Apr 19, 2023, 12:58 PM IST

இந்த ஆண்டு 2023 ஏப்ரல் மாதத்தில் ரூ.80,000க்கு கீழ் இருக்கும் 5 சிறந்த மடிக்கணினிகள் பற்றி இங்கே காணலாம்.

HP Pavilion x360 2-in-1

இந்த எச்பி பெவிலியன் லேப்டாப் கருப்பு கலரில் இருந்து ஒரு மாற்றத்திற்கு உங்களுக்கு சிறந்த ஆப்ஷனாக இருக்கும். ரோஸ் கோல்ட் நிறத்தில் வரும், இந்த லேப்டாப் டிஸ்ப்ளேவை முழுமையாக 360 டிகிரி சுழற்றலாம். மேலும், டேப்லெட்டைப் போல லேப்டாப்பைப் பயன்படுத்தலாம்.

மடிக்கணினியின் எடை 1.5 கிலோ மட்டுமே. இதன் முக்கிய அம்சங்கள் 12வது-ஜென் இன்டெல் கோர் i5 செயலி, 16GB DDR4 ரேம், 512GB SSD மற்றும் 14-இன்ச் முழு-எச்டி டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும். அதிகாரப்பூர்வ ஹெச்பி ஸ்டோரிலிருந்து நீங்கள் வாங்கினால், நிறுவனம் ரூ.2,499 மதிப்புள்ள பேக்கை வழங்குகிறது. அலுவலகத்திற்குச் செல்பவர்களுக்கு சூப்பரான லேப்டாப் ஆகும். ஹெச்பி இந்தியா இ-ஸ்டோரில் ரூ.78,999 விலகி கிடைக்கிறது.

Asus Vivobook S15 OLED

ஆசஸ் விவா புக் சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும்.  15.6 இன்ச் OLED டிஸ்ப்ளேவை உள்ளடக்கிய பட்டியலில் உள்ள ஒரே லேப்டாப் இதுவாகும். இந்த மடிக்கணினியில் 512ஜிபி SSD மற்றும் 8GB DDR4 ரேம் உள்ளது. நீங்கள் அதே 12th-Gen Intel Core i5 CPU ஐப் பெறுவீர்கள். Asus India இ-ஸ்டோரில் இதன் விலை ரூ.74,990 ஆகும்.

Latest Videos


MSI Gaming Sword 15

எம்எஸ்ஐ கேமிங் ஸ்வார்ட் 15 சந்தையில் உள்ள சிறந்த மலிவு விலை கேமிங் மடிக்கணினிகளில் ஒன்றாகும். MSI கேமிங் ஸ்வார்ட் 15 கருப்பு மற்றும் வெள்ளை கலரில் வருகிறது. இதன் எடை 2.6 கிலோ ஆகும். மற்ற முக்கிய அம்சங்கள் என்னவென்றால்  144Hz முழு-HD டிஸ்ப்ளே, 16GB, 1TB NVMe SSD, Nvidia RTX 3050 GPU மற்றும் 16GB RAM ஆகியவை அடங்கும். Amazonல் இதன் விலை ரூ 80,000 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Lenovo Yoga Slim 7i Pro

உங்கள் லேப்டாப் எளிதாக அதே நேரத்தில் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்றால், லெனோவா சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இது 11வது ஜெனரல் இன்டெல் கோர் ஐ5 சிபியுவை உள்ளடக்கியிருந்தாலும், வழக்கமான அலுவலக வேலைகளில் பெரும்பாலானவற்றை இது செய்ய முடியும்.

மடிக்கணினி 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 14-இன்ச் 2.8k டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மற்ற அம்சங்களில் 16ஜிபி LPDDR4X ரேம், 512ஜிபி சேமிப்பு மற்றும் டால்பி அட்மோஸ்ட்-ஆதரவு ஹர்மன் ஸ்பீக்கர்கள் ஆகியவை அடங்கும். Lenovo இந்தியா இ-ஸ்டோரில் ரூ.74,990க்கு கிடைக்கிறது.

Xiaomi Notebook Pro 120G

நீங்கள் ஒரு மேக்புக் போன்ற லேப்டாப் வேண்டும் என்று ஆசைப்பட்டால்,  Xiaomi Notebook Pro வாங்கலாம். 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 14-இன்ச் 2.5K டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 12வது ஜெனரல் இன்டெல் கோர் ஐ5 சிபியு, ஜியிபோர்ஸ் எம்எக்ஸ்550 ஜிபியு, 16ஜிபி எல்பிடிடிஆர்5 ரேம் மற்றும் 512ஜிபி பிசிஐஇ ஜெனரல் 4.0 அதிவேக சேமிப்பு இருப்பதால், உற்பத்தித்திறன் அடிப்படையில், Xiaomi லேப்டாப் தினசரி பணிகளை எளிதாகக் கையாள முடியும். Amazonல் இதன் விலை ரூ.67,999 ஆகும்.

இதையும் படிங்க..போன் வாங்க போறீங்களா? 2023ல் வெளிவரும் டாப் 5 மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்ஸ் லிஸ்ட் இதோ

click me!