வேற லெவல் ஆடியோ அனுபவம் கொடுக்கும் ஒன்பிளஸ் இயர்பட்ஸ்! ரிலீஸ் தேதி எப்போது?

First Published | Nov 22, 2023, 5:10 PM IST

ஒன்பிளஸ் நிறுவனதிதன் அடுத்த தலைமுறை இயர்பஸ் விரைவில் வெளியாக உள்ளது. வரும் டிசம்பர் 4ஆம் தேதி ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன்களுடன் OnePlus Buds 3 அறிமுகமாக உள்ளது.

OnePlus Buds 3

ஒன்பிளஸ் (OnePlus) இயர்போன் OnePlus 12 ஸ்மார்ட்போனுடன் சேர்த்து விரைவில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி சீனாவில் நடக்கும் விழாவில் இரண்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

OnePlus Buds 3

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ரிலீஸ் நிகழ்ச்சிக்கு  முன்கூட்டியே ஒன்பிளஸ் தயாராகியுள்ளது. நிறுவனத்தின் 10வது ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி இந்த நிகழ்வு நடக்க உள்ளது.

Tap to resize

OnePlus Buds 3

இந்நிலையில் OnePlus Buds 3 இன் சான்றிதழ் FCC இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த இயர்பட்ஸ் E509A என்ற மாடல் எண் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. BIS இணையதளத்திலும் இதைபற்றிய தகவல் காணப்படுகிறது.

OnePlus Buds 3

OnePlus Buds 3 இயர்பட்ஸ் குறித்த தகவல்கள் செப்டம்பரில் இருந்தே ஆன்லைனில் கசியத் தொடங்கின. வடிவமைப்பைப் பொறுத்தவரை OnePlus Buds 3 முந்தைய OnePlus Buds Pro 2 போன்ற வடிவமைப்பையே கொண்டிருக்கும்.

OnePlus Buds 3

இயர்பட்ஸ் ஒவ்வொன்றும் 4.77 கிராம் எடையுள்ளதாக இருக்கும். 4.5W உள்ளீடு மற்றும் 1.2W வெளியீடு சக்தி கொண்ட 520mAh பேட்டரியைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு இயர்பட்டும் 58mAh பேட்டரியை பயன்படுத்தும். ANS மோட் இன் செய்யாதபோது 9 மணிநேர பேட்டரி லைஃப் கிடைக்கும். ANC மோட் ஆன் செய்திருந்தால் 6 மணிநேரம் பேட்டரி லைஃப் கிடைக்கும்.

Latest Videos

click me!