ரோகித் சர்மா பிறந்தநாளும், ஐபிஎல் போட்டிகளும் – 1, 2, 3,4 என்று ஒன்னு, ரெண்டு ரன்னு எடுத்த ரோகித் சர்மா!

First Published May 1, 2024, 12:04 AM IST

ரோகித் சர்மாவின் ஒவ்வொரு பிறந்தநாளன்றும் அவர் விளையாடிய ஐபிஎல் போட்டிகளில் முறையே 1, 2, 3, 4 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.

Lucknow Super Giants vs Mumbai Indians, 48th Match

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், ரோகித் சர்மா முதலில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடிய நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று 10 ஆண்டுகளாக விளையாடி வந்தார்.

Rohit Sharma Birthday Runs, Lucknow Super Giants vs Mumbai Indians, 48th Match

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

Rohit Sharna 37th Birthday, Lucknow Super Giants vs Mumbai Indians, 48th Match

இதில், முதல் 3 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் வரிசையாக தோல்விகளை சந்தித்தது. அடுத்த 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், 6ஆவது போட்டியில் தோல்வி அடைந்து 7ஆவது போட்டியில் வெற்றி பெற்றது.

Rohit Sharma, Lucknow Super Giants vs Mumbai Indians, 48th Match

கடைசி 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் தான் தற்போது ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 48ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது.

Lucknow Super Giants vs Mumbai Indians, 48th Match

இதில், முதலில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. இதில், ரோகித் சர்மா ஏப்ரல் 30 ஆம் தேதியான இன்று தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Rohit Sharma

ஆகையால், அவரது பிறந்தநாளில் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், ரோகித் சர்மா 5 பந்துகள் மட்டுமே பிடித்த நிலையில், ஒரு பவுண்டரி உள்பட 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

HBD Rohit Sharam

அதுமட்டுமின்றி கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் ரோகித் சர்மா தனது பிறந்தநாளின் நடக்கும் போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தனது பிறந்தநாளில் விளையாடிய 4 போட்டிகளில் 5 பந்துகள் மட்டுமே பிடித்து 1, 2, 3, 4, என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். இந்த 4 போட்டிகளில் வரிசையாக 5, 5 ,5 மற்றும் 5 ரன்கள் மட்டுமே பிடித்துள்ளார்.

Rohit Sharma 37th Birthday

ரோகித் சர்மா பிறந்தநாள்:

2009 ஏப்ரல் 30, 17 ரன் (20 பந்துகள்)

2014 ஏப்ரல் 30, 1 ரன் (5 பந்துகள்)

2022 ஏப்ரல் 30, 2 ரன் (5 பந்துகள்)

2023 ஏப்ரல் 30, 3 ரன் (5 பந்துகள்)

2024 ஏப்ரல் 30, 4 ரன் (5 பந்துகள்) என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.

click me!