சேலையிலும் கிளாமருக்கு பஞ்சமில்ல.... கட்டுக்கடங்காத கவர்ச்சி காட்டி கதிகலங்க வைக்கும் மாளவிகா மோகனன்...!

First Published Dec 19, 2021, 4:46 PM IST

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நடிகை மாளவிகா மோகனனின் (Malavika Mohanan) லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வரும்  மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன், தற்போது இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரின் பேட்ட படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், அச்சாணி போட்டது போல் இவரது கதாபாத்திரம் நிலையாக ரசிகர்கள் மனதில் நின்றது.

இதைத் தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத விதமாக தனது இரண்டாவது படத்திலேயே தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு ஜோடியாக மாறி ஆச்சர்யப்படுத்தினார் மாளவிகா மோகனன் (Malavika Mohanan).

அப்போதில் இருந்து இவர் எந்த புகைப்படம் போட்டாலும் அதனை ரசிக்க தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்ட்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் (Malavika Mohanan), அவ்வப்போது ஓவர் கவர்ச்சியில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மாளவிகா மோகனன். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.

click me!