பள்ளி ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் கொடுத்த அன்புப் பரிசு! நெகிழ்ச்சியில் ஆசிரியர் ஜேம்ஸ்!

Published : Apr 30, 2024, 06:12 PM ISTUpdated : Apr 30, 2024, 06:30 PM IST
பள்ளி ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் கொடுத்த அன்புப் பரிசு! நெகிழ்ச்சியில் ஆசிரியர் ஜேம்ஸ்!

சுருக்கம்

விழா நடந்துகொண்டிருந்த போதே முன்னாள் மாணவர்கள் சிலர் ஒரு புதிய மாருதி சுஸுகி பலேனோ காரை அங்கு கொண்டுவந்து, இது உங்களுக்கு மாணவர்கள் வழங்கும் அன்புப் பரிசு என்று அறிவித்துவிட்டனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் தங்களுக்குப் பிரியமான பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவருக்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கியுள்ளனர்.

ஆந்திராவைச் சேர்ந்த ஆசிரியர் ஜேம்ஸ் பல்நாடு, அனந்த்பூர், நெல்லூர் எனப் பல ஊர்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்றி உள்ளார். இன்று (ஏப்ரல் 30) இவர் தனது ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதனை முன்னிட்டு அவரது மாணவர்கள் அவரைப் பாராட்டி விழா எடுத்துள்ளனர்.

பல்நாடு அருகே உள்ள சில்லகல்லூர்பேட்டையில் ஏப்ரல் 28ஆம் தேதி இந்த விழா நடைபெற்றது. விழா நடந்துகொண்டிருந்த போதே முன்னாள் மாணவர்கள் சிலர் ஒரு புதிய மாருதி சுஸுகி பலேனோ காரை அங்கு கொண்டுவந்து, இது உங்களுக்கு மாணவர்கள் வழங்கும் அன்புப் பரிசு என்று அறிவித்துவிட்டனர்.

கோடையில் டேங்கரில் உள்ள தண்ணீர் குளிர்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும்? ஈசியான டிப்ஸ் இதோ...

மாணவர்களின் இந்த அன்பில் ஆசிரியர் ஜேம்ஸ் நெகிழ்ந்து போனார். அவரிடம் படித்த மாணவர்கள் இப்போது மிக நல்ல நிலையில் உள்ளனர். உயர்ந்த பணிகளில் உள்ளனர். அனைவரும் சேர்ந்து இந்தக் காரை பரிசாக தங்கள் ஆசிரியருக்கு பரிசாக வழங்கியுள்ளனர்.

ஆசிரியர் ஜேம்ஸுக்கு வழங்கப்பட்டுள்ள மாருதி சுஸுகி பலேனோ, பிரீமியம் ஹேட்ச்பேக் கார் ஆகும். இந்தியாவில் இந்தக் காரின் தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.66 லட்சம் முதல் ரூ.9.88 லட்சம். இதன் ஆன்-ரோடு விலை ரூ.12 லட்சம் வரை இருக்கக்கூடும்.

ஹூண்டாய் ஐ20, டொயோட்டா க்ளான்சா, டாடா அல்ட்ராஸ் போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கு போட்டியாக உள்ள பிரபலமான கார் மாருதி சுஸுகி பலேனோ. இதில் சிஎன்ஜி (CNG) என்ஜின் ஆப்ஷனும் இருக்கிறது என்பது குறிப்பிட்டத்தக்கது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில் பல்கலை வளாகப் போராட்டம்! 900 மாணவர்கள் கைது!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.1 லட்சம் ஆஃபர்.. டேடோனா 660-க்கு அதிரடி தள்ளுபடி.. பைக் ரசிகர்களுக்கு மாபெரும் சலுகை
51 சீட்டர் பேருந்து.. பாதுகாப்பு அம்சங்கள் அசத்துது.. கலக்கும் புதிய BharatBenz BB1924 பேருந்து