Brixton Bikes In India : பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள்கள் விரைவில் இந்திய சந்தையில் தனது பைக்குகளை விற்பனை செய்யவுள்ளது. இந்த பிராண்ட் முதல்முறையாக இந்தியாவிற்கு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவிற்கு வர உள்ளது. அழகான தனது Storr 500 ADV கான்செப்ட் பைக் மூலம் இந்த பிராண்ட் உண்மையில் பிரபலமடைந்தாலும், நம்மில் பலருக்கு இந்த பிராண்ட் பற்றிய பெரிய அளவில் தெரிந்திருக்காது. எனவே, இந்த பிராண்ட் விரைவில் இந்தியாவுக்கு வருவதற்கு முன், பிரிக்ஸ்டன் பற்றி அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளை இப்பொது பார்க்கலாம்.
Brixton Bike
பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள்கள் அடிப்படையில் ஒரு ஆஸ்திரிய பைக் தயாரிப்பாளராகும், இது KSR குழுமத்திற்கு சொந்தமானது, இது ஐரோப்பாவில் இரு சக்கர வாகனங்களை இறக்குமதி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்தியாவைப் பொறுத்தவரை, பிரிக்ஸ்டன் KVMPL (KAW Veloce Motors Pvt. Ltd.) உடன் இணைந்து செயலாற்றும்.
ஆஸ்திரியாவில் உள்ள பிரிக்ஸ்டனின் வடிவமைப்பு மையத்தில் தயாரிக்கப்படும் நான்கு மாடல்களை இங்கு (இந்தியாவில்) அறிமுகப்படுத்து வதன் மூலம், இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்குவதாகவும், மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் உள்ள ஒரு இடத்திலிருந்து (KAW Veloce க்கு சொந்தமானது) அசெம்பிளி லைனை செயல்படுத்துவதாகவும் Brixton கூறியுள்ளது.
ஆனால், இந்த பைக்குகள் முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்படுமா அல்லது வெளிநாட்டில் உருவாக்கப்பட்டு, உள்நாட்டில் அசெம்பிள் என்பது குறித்த தகவல்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த பிராண்ட் பைக்குகளை நாட்டிலேயே தயாரிப்பதற்கு முன், இங்கே அசெம்பிள் செய்வதன் மூலம் தொடங்கினால், அது நல்ல வணிக அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பது பலரின் கருத்து.
தற்போதைய நிலவரப்படி, பிரிக்ஸ்டன் மொத்தம் 14 பைக்குகளை நான்கு வெவ்வேறு திறன்களில் வெளியிடவுள்ளது. 125ccயில் 7 பைக்குகள், 250ccயில் 2 பைக்குகள், 500ccயில் 3 பைக்குகள் மற்றும் 1200ccயில் 2 பைக்குகள் இந்தியாவில் வெளியாகும். இவற்றில், இந்தியாவில் நான்கு மாடல்களுடன் தொடங்குவதற்கான அதன் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது Brixton.
ரூ.40 ஆயிரம் வரை விலை குறைப்பு.. சலுகைகளை அறிவித்த டாடா மோட்டார்ஸ்.. எப்போது வரை தெரியுமா?