கொரோனா 2வது அலையில் சிக்கிய ‘எம்.ஜி.ஆர். மகன்’... படக்குழு எடுத்த அதிரடி முடிவு...!

First Published Apr 19, 2021, 4:58 PM IST

தற்போது கொரோனா 2வது அலை காரணமாக 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதுவும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார், சத்யராஜ், மிருணாளினி, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘எம்.ஜி.ஆர்.மகன்’. அப்பா - மகன் இடையிலான சிக்கலை சுமூகமாக தீர்ப்பது குறித்த குடும்ப சென்டிமெண்ட் திரைப்படமான ‘எம்.ஜி.ஆர்.மகன்’ ஏப்ரல் 23ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
undefined
தற்போது கொரோனா 2வது அலை காரணமாக 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதுவும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
undefined
,எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தின் தொடக்கத்திலிருந்தே, நீங்கள் அனைவரும் உங்கள் முழு ஆதரவை வழங்கி வருகிறீர்கள். எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் ஏப்ரல் 23 அன்று வெளியிடப்படும் எனஏற்கனவே அறிவித்திருந்தோம்.தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.
undefined
இத்திரைப்படத்தில் பணியாற்றிய பல்வேறு தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பு, சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும், மற்றும் விநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கு இனங்க, எங்கள் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை ஒத்தி வைக்க முடிவு எடுத்திருக்கிறோம்.
undefined
தமிழ்நாடு முழுவதும் விநியோகஸ்தர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர், சூழல் மிகவும் உகந்ததாக மாறும் பட்சத்தில் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தை பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல செய்துள்ளோம். முடிவு அனைவரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். மிக விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
undefined
click me!