20 வருடத்திற்கு பின் 'கில்லி' படத்தை கொண்டாடும் நீங்கள்... இதை எப்போது செய்வீங்க? ஆதங்கத்தை கொட்டிய தாமு!

First Published Apr 30, 2024, 5:15 PM IST

கில்லி படத்தின் ரீ-ரிலீஸ் வெற்றி குறித்து, பிரபல நடிகர் தாமு விரக்தியில் பேசி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

கடந்த 2004 ஆம் ஆண்டு, பிரபல இயக்குனர் தரணி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் 'கில்லி'. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஆசிஷ் வித்யாதிரி,  பிரகாஷ்ராஜ்,  தாமு, நாகேந்திர பிரசாத், ஜெனிஃபர், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்தத் திரைப்படம் வெற்றிகரமாக 200 நாட்கள் ஓடியது மட்டுமின்றி, தளபதி விஜய்க்கு முதல் 500 கோடி வசூலை பெற்றுத்தந்த திரைப்படமாகவும் மாறியது. இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்த படம், மீண்டும் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, சுமார் 150 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

Aparna Das Reception Photos: நடிகை அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமண வரவேற்பு புகைப்படங்கள்!
 

திரைப்படம் வெளியானதில் இருந்தே, புது படத்திற்கு எப்படி ரசிகர்கள் ஆர்வத்துடன் செல்வார்களோ... அதே போல் இந்த படத்தையும் பார்க்க தொடர்ந்து ஆர்வம் கட்டி வருகிறார்கள்.  குறிப்பாக தளபதி ரசிகர்கள் 'கில்லி'  படத்தின் ரீ ரிலீஸை, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என பட்டாசு வெடித்து வரவேற்ற காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது.
 

நடிகர் விஷால் - ஹரி கூட்டணியில் வெளியான 'ரத்னம்' படத்தையே கில்லி படம் டம்மி ஆகி விட்டதாக சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கூறி இருந்தார். கில்லி ரீ-ரிலீஸ் இதுவரை சுமார் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இப்படத்தில் ஓட்டேரி நரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்த தாமு அதிருத்தியோடு தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி உள்ளார்.

Ajith Movie: படப்பிடிப்பு துவங்கும் முன்பே... பல கோடிக்கு விற்பனையான 'குட் பேட் அக்லி'! மாஸ் காட்டும் அஜித்!

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது,  "20 வருடங்கள் கழித்து, ரிலீசான திரைப்படத்தை விசில் அடித்து ரசிகர்களும் மக்களும் கொண்டாடுகிறார்கள். ஆனால் 20 வருடங்களுக்கு முன்பு நடப்பட்ட மரக்கன்றுகள் தற்போது பல இடங்களில் வெயிலுக்கு நிழல் குடையாக இருக்கிறது. அந்த மரக்கன்றுகளை எப்போது விசில் அடித்து கொண்டாடப் போகிறீர்கள்? என்று ஒருவித ஆதங்கத்தோடு தாமு பேசியிருக்கிறார்.

dhamu

இவருடைய இந்த பேச்சுக்கு பலர் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். தளபதியே விஜய்யுடன் பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ள தாமு, சமீப காலமாக 'லீட் இந்தியா' என்கிற அமைப்பின் மூலம் பல பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு சொற்பொழிவாற்றி வருகிறார்.

Ajith: கடைசி நேரத்தில் முட்டிக்கிச்சு! அஜித் நடிக்க வேண்டிய ஹிட் பட வாய்ப்பை தட்டி தூக்கிய நடிகர் பிரஷாந்த்.!

click me!