எள் சாகுபடியில் உரமும் உரமிடுதலும்

அ. இரசாயன உரம்

மண் பரிசோதனை படி உரமிடுதல் சிறந்தது. அவ்வாறு செய்யாவிடில் பொதுவான பரிந்துரையின் படி பின்பற்றவும்.

1.. மானாவாரி:

எக்டருக்கு 23:13:13 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து (அ) 17:13:13 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துடன் 3 பாக்கெட் அசோஸ்பைரில்லம் 600கி / எக்டர் மற்றும் 3 பாக்கெட் 600 கிராம் / எக்டர் பாஸ்போபேக்டீரியா (அ) 6 பாக்கெட் அசோபாஸை 1200 கிராம் / எக்டர் இட வேண்டும்.

2.. இறவை:

எக்டருக்கு 35 : 23 : 23 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து (அ) 21 : 23 : 23 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துடன் 3 பாக்கெட் அசோஸ்பைரில்லம் 600கி / எக்டர் மற்றும் 3 பாக்கெட் 600 கிராம் / எக்டர் பாஸ்போபேக்டீரியா (அ) 6 பாக்கெட் அசோபாஸை 1200 கிராம் / எக்டர் இட வேண்டும்.

3.. தழை, மணி, சாம்பல் சத்து முழுவதையும் அடியுரமாக அளிக்க வேண்டும். எக்டருக்கு 5 கிலோ மாங்கனீஸ் சல்பேட்டை சேர்த்து கொள்ளவும்.

4.. பரிந்துரைக்கப்பட்ட 100% தழை, மணி, சாம்பல் சத்தினை அளித்த நிலக்கடலை பயிரை தொடர்ந்து இறவை எள் பயிரிடும்போது, பரிந்துரைக்கப்பட்ட உரங்களில் தழைச்சத்து முழுவதையும், 50% மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தினையும் இட வேண்டும்.

5.. 30 செ.மீ. இடைவெளியில் 5 செ.மீ. ஆழத்தில் வாய்க்கால் தோண்டி உரக்கலவையினை அதில் இட்டு, 3 செ.மீ. ஆழத்திற்கு மண் கொண்டு மூட வேண்டும். இவ்வாறு வாய்க்காலில் இடவில்லை எனில், உரங்களை சீராக படுக்கையின் மீது தூவ வேண்டும்.

6.. எக்டருக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பலக்லைக்கழகம் நுண்ணூட்டக்கலவை 7.5 கிலோவை செறிவூட்டப்பட்ட தொழுவுரமாக மானாவாரி எள்ளுக்கும், எக்டருக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நுண்ணூட்டக்கலை 12.5 கிலோவை செறிவூட்டப்பட்ட தொழுவுரமாக இறவை எள்ளுக்கு இட வேண்டும்.

7. ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுன்உரக் கலவை மற்றும் தொழுவுரத்தை சேர்த்து தகுந்த ஈரப்பதத்தில்   ஒரு மாதம் நிழலில் உலர்த்தவும்.

தொழு உரம்

1.. எக்டருக்கு12.5 டன் மக்கிய தொழு உரம் கடைசி உழவிற்கு முன்பு இடவும்.

இந்த வழிகளைப் பயன்படுத்தி எள் சாகுபடியில் உரமும், உரமிடுதலும் செய்யலாம்.