சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. முதலில் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத சீன அரசாங்கம், அதன் பின்னர் கொரோனா வைரஸின் வீரியத்தை கண்டு கடும் கட்டுப்பாடுகளை பிறப்பித்தது. 

தற்போது சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்துள்ளதால், அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது.ஹூபே மாகாணத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த கடைகள், உணவகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மக்களும் முகக்கவசங்களை அணிந்து கொண்டு வீட்டை விட்டு, வெளியே வரத் தொடங்கியுள்ளனர். 

கடும் கட்டுப்பாடுகள், உயிர் பயம், மன அழுத்தம் என அனைத்தையும் கடந்து தற்போது நிம்மதி பெருமூச்சு விட தொடங்கியிருக்கிறது சீனா. இதனை கொண்டாடும் விதமாக சீனாவில் மீண்டும் மாமிச சந்தைகள் திறக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் சிறப்பு சலுகைகளுடன் மாமிசங்கள் விற்கப்படுகின்றன. 

இதையும் படிங்க: உலகமே கொரோனா பீதியில்... வெட்கமே இல்லாமல் வடகொரியா செய்த காரியம்...!

சீனாவின் கடல் உணவுகள் விற்பனை செய்யப்பட்ட வுகான் சந்தையில் இருந்து தான் கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. அங்கு இறால் விற்பனை செய்து வந்த வீ ஹூய்சியான் என்ற பெண்மனி தான் அந்த வைரஸால் முதலில் பாதிக்கப்பட்டு,  தற்போது லட்சக்கணக்கானோர் மரணிக்க காரணமானவர். 

இதையும் படிங்க: எடுப்பான முன்னழகை காட்டி... இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் யாஷிகா ஆனந்த்... வைரல் போட்டோ...!

சீனாவால் தற்போது உலகம் முழுவதும் துயரத்தை சந்தித்து வர, சீனர்களே அதைப் பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல் வுகான் சந்தையில் ஆயிரக்கணக்கில் கூடி, வவ்வால், நாய், பூனை குட்டிகள், எலிகள் என இஷ்டத்திற்கு மாமிசங்களை வாங்கி ருசிபார்க்க ஆரம்பித்துள்ளனர். 

இதையும் படிங்க: சிம்புவுடன் ஓவர் நெருக்கமாக இருக்கும் ஹன்சிகா... வைரலாகும் "மஹா" போட்டோவால் குஷியான ரசிகர்கள்...!

கொரோனா தொற்றை உருவாக்கி மோசமான இறைச்சி சந்தைகளை மீண்டும் சீனா திறந்துவிட்டிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அங்குள்ள குயிலி சந்தையில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் குவிந்து, கொரோனாவிற்கு எதிரான தங்களது வெற்றியை கொண்டாடி வரும் நிலையில், உலகமே பீதியில் ஆழ்த்துள்ளது.