கொரோனா வைரஸ் தம்மை தாக்கியுள்ளதா இல்லையா என்பது தெரியாமலேயே பலர் நோய்களுடன் உலா வருகின்றனர் என அறிவியல் ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர் ,  இந்த வைரஸ் உடலில் நுழைந்த சில நாட்கள் கழித்தே அதன் அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது எனவும் அதுவே இந்த வைரஸ் அறிகுறிகளை   ஆரம்பத்திலேயே தெரிந்துகொள்வதில் மூலம்  அதற்கு முறையான சிகிச்சை பெற்று அதிலிருந்து விடுபட முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  உலகில் கொரோனா வைரஸ் தம்மை தாக்கி உள்ளதா என்பதை ஆரம்பத்திலேயே கண்டறிவதன்  மூலம் அதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என மருத்துவர்கள் தரப்பிலுப் கூறப்படுகிறது .

 

உலகில் நோய் நம்மை தாக்கி இருக்கிறதா இல்லையா என்பது குறித்து தெரிந்துகொள்ள எளிய வழி என்ன என்பது குறித்தும் கொரோனா வைரஸை ஆரம்பத்திலேயே கண்டறியும் முறை குறைத்து அமெரிக்கா காது தொண்டை நோயியல் அகாடமியின் தலைமைச் செயல் அதிகாரியான ஜேம்ஸ் டென்னிஸ் தகவல் வெளியிட்டுள்ளார்.  அதாவது ஒருவருக்கு சைனஸ் அல்லது சளி போன்ற பிரச்சினைகள் ஏதுமின்றி பொருட்களை முகர்ந்தாள் மனம் தெரியாமல் போனாலும் ,  உணவுகளை சுவைத்தால் நாக்கில் சுவை தெரியாமல் போனாலும் ,  அதுகூட கொரோனா வைரசின் ஆரம்பக்கட்ட அறிகுறி என அவர் எச்சரித்துள்ளார் .  அதே நேரத்தில் அது கொரோனா வைரஸ் தாக்கமாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்ததற்குப் பின்னர் பரிசோதனைகளை செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.  

அத்துடன் அவர்கள் தங்களையே தனிமைப்படுத்திக் கொண்டு பிறருக்கு நோய் பரவாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா உலக அளவில் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி நாளுக்கு நாள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில்  இந்த  வைரஸ் உலகளவில் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்தை கடந்துள்ளது.  இந்நிலையில் சமூகத்திலிருந்து பிரிந்து தனித்து இருப்பதே இந்த நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சிறந்த வழி என கூறப்பட்டு வரும் நிலையில்  கொரோனாவை  ஆரம்பக்கட்டத்திலேயே அறிந்து கொள்வதின் மூலம் நோய்ப் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர் .

 

வைரஸ் பாதிப்பு உள்ள பலரும் தங்களுக்கு ஆரம்பத்தில் வாசனையும் சுவையும் தெரியாமல் போனதாக கூறியுள்ளனர் . இன்னும் பலர் கொரோனா வைரஸ் தாக்கி சில நாட்களுக்குப் பின்னரே வாசனை தெரியாமலும் நாக்கில் சுவை உணர முடியாமலும் போனதாக தெரிவிக்கின்றனர், என்பதை  ஆய்வாளர் ஜேம்ஸ் டென்னிஸ் மேற்கோள் காட்டியுள்ளார்.