மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்! தாய்லாந்து ஏர்போர்ட்டில் பதறி ஓடிய மக்கள்!!
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் காரணமாக, மியான்மர் மற்றும் தாய்லாந்தின் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. தாய்லந்து தலைநகர் பாங்காக்கில் மிகப்பெரிய கட்டிடம் சரிந்து விழுந்துள்ளது. பாங்காக் விமானநிலையத்தில் பயணிப்பதற்காக காத்திருந்தந்த மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடிய வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது .