Asianet News TamilAsianet News Tamil

தைரியம் இருந்தால் திமுக தனித்து நிற்கட்டும்… சவால் விடுத்த எஸ்.பி.வேலுமணி!!

தமிழகத்திலே மிகப்பெரிய கட்சி என்றால் அது அதிமுக தான் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

First Published Jan 5, 2023, 6:17 PM IST | Last Updated Jan 5, 2023, 6:17 PM IST

தமிழகத்திலே மிகப்பெரிய கட்சி என்றால் அது அதிமுக தான் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாமக கூட்டணி தொடர்பான குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளிப்பார். அதிமுகவை பொறுத்தவரை எந்த ஒரு கட்சியையும், எந்த ஒரு தனி நபரையும் துன்பறுத்தி பேச வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

இதையும் படிங்க: பெண் தோழியுடன் வைரலாகும் மகன் இன்பநிதியின் புகைப்படம்..! கிருத்திகா உதயநிதியின் ரியாக்சன் என்ன தெரியுமா?

கூட்டணி கட்சியை எப்போதும் அதிமுக அனுசரித்தே செல்லும். அதை நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் பார்ப்பீர்கள். அதிமுக பிளவுபட்டு விட்டது என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வலுவாக தான் உள்ளது. தமிழகத்திலே மிகப்பெரிய கட்சி என்றால் அது திமுக கிடையாது. அதிமுக தான். தைரியம் இருந்தால் திமுக தனித்து நிற்கட்டும்.

இதையும் படிங்க: அண்ணாமலையினால் தான் பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை..!- கே.எஸ்.அழகிரி ஆவேசம்

நாங்களும் தனித்து நிற்கிறோம். யார் வெற்றி பெறுவோம் என்று பார்க்கலாம். எங்களுக்கு இணையான கட்சி எதுவுமில்லை. கிராமங்கள்தோறும், ஊராட்சிதோறும், பேரூராட்சிதோறும் ஒவ்வொரு ஊரிலும் திமுகவை எதிர்த்து போராட்டம் நடத்தும் சக்தி அதிமுகவுக்கும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் தான் உண்டு என்று தெரிவித்தார். 

Video Top Stories