தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி பெண் தோழியோடு நெருக்கமாக இருப்பது போல் வெளியான புகைப்படத்திற்கு அன்பு செய்யவும் , வெளிப்படுதவும் அச்சப்படாதே என கிருத்திக உதயநிதி தெரிவித்துள்ளார்.
இன்பநிதியின் வைரல் புகைப்படம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேரனும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் மகனுமான இன்பநிதி கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருப்பவர், இவர் கால்பந்து போட்டிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளிநாடு சென்றிருந்தார். அவரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையம் சென்று வழியனுப்பி வைத்தார். உதயநிதி தமிழக அமைச்சரானதை தொடர்ந்து அடுத்து இன்பநிதி அரசியலுக்கு வர இருப்பதாகவும், அவரும் முதலமைச்சர் ஆவார் என எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
உதயநிதி மகனின் புகைப்படத்தை கசியவிட்டது அண்ணாமலை டீம்..! காயத்திரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டு

புகைப்படத்தை விமர்சிக்கும் பாஜக
இந்த நிலையில் இன்பநிதி தனது பெண் தோழியோடு நெருக்கமாக இருப்பது போன்று புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியிருந்தது. இந்த புகைப்படம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக பாஜக மற்றும் அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் இந்த புகைப்படத்தை வெளியிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.
அன்பு செய்ய அச்சப்படாதே
இந்த புகைப்படத்திற்கு பதில் அளிக்கும் வகையில் இன்பநிதியின் தாயார் கிருத்திகா உதயநிதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அன்பு செய்யவும் , வெளிப்படுதவும் அச்சப்படாதே. இயற்கையை அதன் முழுத் தன்மையில் புரிந்து கொள்ள இது ஒரு வழியாகும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
எழுத்தாளர், மக்கள் சேவகர் சகோதரி கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.! அண்ணாமலை டுவிட்டர் பதிவு
