எழுத்தாளர், மக்கள் சேவகர் சகோதரி கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.! அண்ணாமலை டுவிட்டர் பதிவு


திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழியின் 55வது பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்  எழுத்தாளர், மக்கள் சேவகர் சகோதரி என தனது வாழ்த்தில் புகழ்ந்துள்ளார். 

Political party leaders wish DMK deputy general secretary Kanimozhi on his birthday

கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து

திமுக துணை பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தனது 55வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதற்காக பல இடங்களில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் ஆகியவை செய்யப்பட்டு வருகிறது. திமுக மகளிர் அணி செயலாளராக இருந்த கனிமொழிக்கு இந்த ஆண்டு திமுக துணைப்பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து துணைப்பொதுச்செயலாளர் என்ற பதவியோடு கொண்டாடும் முதல் பிறந்தநாள் ஆகும். கனிமொழியின் பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உதயநிதி மகனின் புகைப்படத்தை கசியவிட்டது அண்ணாமலை டீம்..! காயத்திரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டு

Political party leaders wish DMK deputy general secretary Kanimozhi on his birthday

முதலமைச்சர் நேரில் வாழ்த்து

திமுக தலைவரும், கனிமொழியின் அண்ணனுமான மு.க.ஸ்டாலின் கனிமொழியை நேரில் சந்தித்து பிறந்தாள் வாழ்த்து தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் கனிமொழிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

அண்ணாமலை வாழ்த்து செய்தி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்த செய்தியில் எழுத்தாளர், மக்கள் சேவகர், திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சகோதரி திருமதி கனிமொழிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.! அதிகம், குறைவான வாக்காளர்களை கொண்ட தொகுதி எது.? தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios