உதயநிதி மகனின் புகைப்படத்தை கசியவிட்டது அண்ணாமலை டீம்..! காயத்திரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டு

திமுகவின் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புள்ள செக்ஸ் வீடியோவை மீண்டும் வெளியிடப்போவதாக அண்ணாமலை கூறியுள்ளார். எந்த தலைவர் அப்படி சொல்வார். அது மிகவும் அருவருப்பானது. கட்சியில் இப்படித்தான் அச்சுறுத்தப்படுகிறார்கள். இன்னும் பல டேப்கள் இருப்பது போல் தெரிகிறது என காயத்திரி ரகுராம் குற்றம்சாட்டியுள்ளார்.

Gayathri Raghuram said that it was the Annamalai team that published the photo of Udayanidhi son

அதிகரிக்கும் உட்கட்சி மோதல்

பாஜகவில் கடந்த சில நாட்களாக உட்கட்சி பிரச்சனை அதிகரித்துள்ளது. டெய்சி-சூர்யா சிவா மோதல், கட்சியில் இருந்து நடிகை காயத்திரி ரகுராம் நீக்கம், அலிஷா அப்துல்லாவின் குற்றச்சாட்டு என தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் தான் பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை காயத்திரி ரகுராம் தெரிவித்தார். பாஜகவில் அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை,

 “கட்சியிலிருந்து யார் விலகினாலும் புகழ்ந்துவிட்டு செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. கட்சியை விட்டு விலகினாலும் அவரது வாழ்க்கை நன்றாக இருக்கட்டும். கட்சியிலிருந்து பல காரணங்களுக்காக ஒருவர் வெளியேறுகின்றனர். என் மேல் புகார் அளிக்காதவர்கள் யாரும் இல்லை. புகார் அளிப்பது நல்லது தான். அது தான் பேசும் பொருளாக மாறுகிறது" என தெரிவித்து இருந்தார்.

இரண்டு மாஜி எம்எல்ஏக்களுக்கு அமைப்பு செயலாளர் பதவி..! இபிஸ் அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஓபிஎஸ்

Gayathri Raghuram said that it was the Annamalai team that published the photo of Udayanidhi son

பத்திரிக்கையாளர்களுடன் மோதல்

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய அண்ணாமலை, பத்திரிக்கையாளர்கள் அரசாங்கத்திடம் இருந்து பணம் பெறுவதாக தெரிவித்து இருந்தார். மேலும் பத்திரிக்கையாளர்களை ஒருமையில் கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்க்கு பல்வேறு பத்திரிக்கையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் இது தொடர்பாக டுவிட்டர் பதிவிட்ட காய்த்திரி ரகுராம், என் கேள்வி கேட்டதற்காக பத்திரிகையாளர்களை திட்டுவதும், மிரட்டுவதும் உங்கள் விரக்தியை காட்டுகிறது, அண்ணாமலை. பத்திரிகைகளை அவமதித்ததற்காக கண்டிக்கிறேன். ஹனிட்ராப் பிரச்சினை வந்தபோது ரஃபேல் வாட்ச் வைத்து திசை திருப்பிவிட்டீர்கள். இப்போது பிஜிஆர் வைத்து திசை திருப்பிவிட்டீர்கள் என கூறியுள்ளார்.

மோடி அப்படி என்றால்.. அண்ணாமலை இப்படி.. பாஜகவை வச்சு செய்யும் செல்வபெருந்தகை..!

 

செக்ஸ் வீடியோ வெளியிடுகிறாரா.?

மேலும் கட்சியில் இருப்பவர்களுக்கு ஒருவரின் நலமும் பாதுகாப்பும் அமைய வேண்டும் என்று அண்ணாமலை வாழ்த்த வேண்டும். ஒருவரை கட்சியை விட்டு வெளியே செல்லும் போது மற்ற இடங்களில் அவர்கள் நலமும் பாதுகாப்புடன் இருந்தால் அண்ணாமலை அதை கொடுக்க தவறிவிட்டார் & தோல்வியடைந்தார் என்று அர்த்தம் என கூறியுள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணாமலை திமுகவின் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செக்ஸ் வீடியோவை மீண்டும் வெளியிடப்போவதாக கூறியுள்ளார். எந்த தலைவர் அப்படி சொல்வார்.

 

இன்பநிதி படத்தை வெளியிட்டது அண்ணாமலை

அது மிகவும் அருவருப்பானது. கட்சியில் இப்படித்தான் அச்சுறுத்தப்படுகிறார்கள். இன்னும் பல டேப்கள் இருப்பது போல் தெரிகிறது. தற்போது அண்ணாமலை டீம் உதயநிதி ஸ்டாலின் மகனின் புகைப்படத்தை கசியவிட்டு அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணையும் அவமானப்படுத்துகிறது. பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் அண்ணாமலை தலைமையில்? அடல்ட் வீடியோ ஆடியோ போட்டோ புகழ் அண்ணாமலை என தெரிவித்துள்ளார். அண்ணாமலை நாட்டுக்கோ, கட்சிக்கோ நல்லது செய்யவில்லை. டேப்களை மட்டும் சேகரிக்கிறீர்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள்

செய்தியாளர்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் அண்ணாமலைக்கு அந்த நோயாக இருக்குமோ? வெளுத்து வாங்கும் மநீம..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios