இரண்டு மாஜி எம்எல்ஏக்களுக்கு அமைப்பு செயலாளர் பதவி..! இபிஸ் அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஓபிஎஸ்
அதிமுக அமைப்பு செயலாளராக முன்னாள் எம்எல்ஏக்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கந்தசாமி ஆகியோரை நியமித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக மோதல்
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்-இபிஎஸ் என அதிமுக பிளவுப்பட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க எடப்பாடி உத்தரவிட்டார். ஆனால் இதனை ஏற்க மறுத்த ஓபிஎஸ் தன்னை நீக்க எடப்பாடிக்கு அதிகாரம் இல்லையென கூறினார். இதனிடையே அதிமுகவில் ஓபிஎஸ் தனியாக செயல்பட்டு வரும் நிலையில், தனது அணியை பலப்படுத்து மாநில, மாவட்ட, கிளை கழக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். தற்போது தனது அணிக்கு புதிதாக இரண்டு அமைப்பு செயலாளரை நியமித்த உத்தரவிட்டுள்ளார். அதன் படி அவர் வெளியிட்டு அறிவிப்பில்,
என் மகனை பார்த்தீங்களா.. ஸ்டாலினை கட்டியணைத்து கதறிய இளங்கோவன்.. அழாதீங்கனு ஆறுதல் கூறிய முதல்வர்..!
புதிய நிர்வாகிகள் நியமனம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
கழக அமைப்புச் செயலாளராக K.E.கிருஷ்ணமூர்த்தி, Ex. MLA அவர்கள் கொம்மம்பட்டு கிராமம், கோவிந்தாபுரம் அஞ்சல், ஊத்தங்கரை வட்டம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்
கழக அமைப்புச் செயலாளரராக P.S. கந்தசாமி, Ex. MLA அவர்கள் அரவக்குறிச்சி. கரூர் மாவட்டம்.
கழக மாணவரணி இணைச் செயலாளராக B.G. வெற்றிவேல் பாரதகோவில் கிராமம், மிட்டஅள்ளி அஞ்சல், கிருஷ்ணகிரி வட்டம் மற்றும் மாவட்டம்
கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தாளப்பள்ளம், துணைச் செயலாளர் திரு. T.R. சுரேஷ்குமார், D.Co-op அவர்கள் பிக்கம்பட்டி அஞ்சல், பென்னாகரம், தர்மபுரி மாவட்டம்
கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளராக திரு. D. நிர்மல்குமார், D.M.E.,அவர்கள்
12/2, A.P. ரோடு, இரண்டாவது லேன், சூளை,சென்னை-112
கழக மாணவர் அணி இணைச் செயலாளராக திரு. T. அலெக்சாண்டர் அவர்கள், 9/17, கிளப் ரோடு,
சேத்துபட்டு,சென்னை-31
கழக வர்த்தக அணி பொருளாளராக திரு. M. ஜீவராஜ் அவர்கள் 22A காசி விஸ்வநாதர் கோயில்தெரு, வேலூர்.
கழக விவசாயப் பிரிவு துணைச் செயலாளராக . R. ரங்கராஜ் அவர்கள்227/2, நாயுடு தெரு,மேல்மங்கலம் அஞ்சல்,
பெரியகுளம் தாலுகா, ஆகியோர் நியமிக்கப்படுவதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்