எம்.எல்.ஏக்களுக்கு பலாபழம் கொடுத்த அமைச்சர் எம்.கே.பன்னீர்செல்வம்... இணையத்தில் பரவும் வீடியோ!!

புதுச்சேரியை தொடர்ந்து தமிழகத்திலும் எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் எம்.கே.பன்னீர்செல்வம் பலாபழம் பரிசாக கொடுத்துள்ளார்.

Share this Video

புதுச்சேரியை தொடர்ந்து தமிழகத்திலும் எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் எம்.கே.பன்னீர்செல்வம் பலாபழம் பரிசாக கொடுத்துள்ளார். புதுச்சேரியில் நடபாண்டிற்கான நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் கடந்த 13 ஆம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்கியது. இந்த நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்ட எம்.எல்.ஏக்களுக்கு நன்றி சொல்லும் விதமாக பாஜக எம்.எல்.ஏ சட்டப்பேரவை வளாகத்தில் பலாப்பழம் கொடுத்தார்.

இதையும் படிங்க: கோடு போட்ட ஸ்டாலின்.. ரோட்டை போட்ட எடப்பாடி பழனிசாமி.. ஏய் எப்புட்றா.! பாவம் கட்சிக்காரங்க !!

இதேபோல் தமிழகத்திலும் எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் எம்.கே.பன்னீர்செல்வம் பலாபழம் கொடுத்து அசத்தினார். முன்னதாக தமிழக சட்டசபையில் இன்று வேளான் மற்றும் உழவர் நலத்துறை மானிய கோரிக்கையை அமைச்சர் எம்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதனையொட்டி வேளான் துறையை குறிக்கும் வகையிலும் தனது சொந்த மாவட்டம் கடலூர் பலாவுக்கு பெயர் போன பண்ருட்டி தேன் பாலாவை சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கினார். இந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

இதையும் படிங்க: அச்சச்சோ.! திடீரென சரிந்த மேடை.. ஜஸ்ட் மிஸ்.!! எகிறி குதித்த அன்புமணி ராமதாஸ் - வைரல் வீடியோ

Related Video