கடன் தொல்லை.. மன உளைச்சலுக்கு ஆளான நபர்.. மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி - வெளியான அதிர்ச்சி Video!
Cuddalore : கடலூரில் கடன் பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்தவர் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் அடுத்த குண்டு உப்பலவாடி பகுதியைச் சார்ந்தவர் தயாநிதி. இவர் ஆல்பேட்டை பகுதியில் மளிகை கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது தாயின் மருத்துவ செலவுக்காக 20க்கும் மேற்பட்டோரிடம் இருந்து ரூபாய் 1.5 கோடி வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக கடன் அளித்தவர்கள் அவரிடம் பணத்தை திருப்பி செலுத்தக் கோரிய நிலையில் பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் தயாநிதி வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் அவருக்கு கை கால்களில் முறிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.