Asianet News TamilAsianet News Tamil

மாகாளியம்மன் கோவிலுக்குள் செருப்பு கால்களுடன் வந்த திமுக எம்.பி.. வைரலாகும் வீடியோ..!

கோவை  குறிச்சியில் குண்டத்து மாகாளியம்மன் கோவிலுக்குள் செருப்பு கால்களுடன் திமுக எம்.பி மற்றும் கட்சியினர் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

கோவை  குறிச்சியில் குண்டத்து மாகாளியம்மன் கோவிலுக்குள் செருப்பு கால்களுடன் திமுக எம்.பி மற்றும் கட்சியினர் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

கோவை மாவட்டம் குறிச்சி பகுதியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த புகழ்மிக்க  குறிச்சி குண்டத்து மாகாளியம்மன் கோவில். இக்கோவிலில் திமுக எம்.பி. சண்முகசுந்தரம்,  தனது ஷு காலுடன் கோவிலுக்குள் சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு சென்ற அவருடன் திமுக கட்சி நிர்வாகிகள் சிலரும் சென்று உள்ளனர். மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வந்த அப்பகுதி பொதுமக்கள் கோயில் முன்பாக அவர்கள் அணிந்து வந்து இருந்த காலணிகளை கழட்டி வைத்து விட்டு சென்ற நிலையில் திமுக வினர் மட்டும் காலணிகளுடன் கோவிலுக்கு சென்றது, பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிகழ்ச்சியை அங்குள்ள பொதுமக்கள் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Video Top Stories