தமிழ்நாட்டிற்கு கோதுமை அளவை உயர்த்தி வழங்க வேண்டும் - மாநிலங்களவையில் திமுக எம்.பி.இராஜேஸ்குமார்!

Velmurugan s  | Published: Mar 26, 2025, 6:00 PM IST

மாநிலங்களவையில் இராஜேஸ்குமார் எம்.பி பேசியதாவது தமிழ்நாட்டில் கோதுமை பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசரத் தேவையை கருத்தில் கொண்டு தங்களது கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். தமிழ்நாடு கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலம் இல்லையென்பதால், அது இந்திய உணவுக் கழகத்தின் விநியோகத்தைச் சார்ந்துள்ளது.கோதுமை ஒதுக்கீட்டை மாதத்திற்கு 23,000 மெட்ரிக் டன்னாக அதிகரிக்க ஏற்பாடு செய்யுமாறும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் இது சாத்தியமில்லை என்றால், திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் (OMSS) கீழ் 15,000 டன் கோதுமையை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறும் ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Read More...

Video Top Stories