Watch : காவிரியில் வெள்ளப்பெருக்கு! - வரும் 17ம் தேதி வரை அம்மா மண்டபம் காவிரி படித்துறை தறகாலிகமாக மூடல்!
காவிரி ஆற்றில் அதிக வெள்ள அபாயம் எதிரொலி 17ஆம் தேதி யான (ஐப்படி ஒன்றாம் தேதி) ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் இரண்டு லட்சம் கன அடி உபரி நீர் தற்போது முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடத்தில் அப்படியே அனுப்பப்பட்டு வருகிறது.
இதனால் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை பகுதியில் இரு கரைகளை தொட்டு காவிரி நீர் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது பரிகார பூஜைகள் செய்வது உள்ளிட்டவைகள் தடை செய்யப்பட்டு பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் தற்காலிகமாக இன்று முதல் மூடப்பட்டு உள்ள நிலையில் மீண்டும் மறு உத்தரவு வர வரை மூடப்பட்டிருக்கும், காவிரி ஆற்றில் உபரி நீர் படிப்படியாக குறைந்த உடன் வழக்கம் போல அம்மா மண்டபம் திறக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது..
இருப்பினும் அதன் அருகே இருக்கும் வீரேஸ்வரம் காவிரி படித்துறையில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் அங்கு கரை புரண்டு ஓடும் வெள்ள நீரில் குளித்து வருகின்றனர்..