நல்ல நண்பரை இழந்துட்டேன்... ரொம்ப வேதனையா இருக்கு - மயில்சாமி குறித்து லொள்ளு சபா சுவாமிநாதன் பேச்சு

நடிகர் மயில்சாமியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய லொள்ளு சபா சுவாமிநாதன், ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டதாக கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

First Published Feb 19, 2023, 3:06 PM IST | Last Updated Feb 19, 2023, 3:06 PM IST

நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மறைவு கோலிவுட்டையே சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மாரடைப்பால் திடீரென இன்று காலை மரணமடைந்த மயில்சாமியின் உடலுக்கு ஏராளமான ரசிகர்களும், திரையுலக நட்சத்திரங்களும், அரசியல் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கு நடிகர் சுவாமிநாதன், மயில்சாமி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து பேசிய சுவாமிநாதன், ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டதாக கூறி உள்ளார். கையில எவ்ளோ காசு இருந்தாலும் அடுத்தவங்களுக்கு எடுத்து உதவி செய்யக்கூடிய நல்ல மனம் கொண்டவர். மிகப்பெரிய சிவ பக்தர். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என கூறியுள்ளார்.

Read More...

Video Top Stories