மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் மாவீரன் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிதாக உருவாகி இருக்கும் திரைப்படம் மாவீரன். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். யோகிபாபுவின் மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார். இவர் மண்டேலா படத்துக்காக 2 தேசிய விருதுகளை வாங்கியவர் ஆவார். பிரபல இயக்குனர் மிஷ்கின் இப்படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து இருக்கிறார். பரத் சங்கர் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

மாவீரன் ஒரு பேண்டஸி திரைப்படமாகும். இதில் சிவகார்த்திகேயன் கார்டூனிஸ்ட் ஆக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மாவீரன் படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற ஜூலை 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

இதையும் படியுங்கள்... மாவீரன் பட விழாவுக்கு தொகுப்பாளர்கள் ரெடி... பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ இதோ

மாவீரன் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் இரு வாரங்களே எஞ்சி உள்ளது. இப்படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளன. அதில் சீனு சீனு என்கிற பாடலை அனிருத் பாடியுள்ளார். அதேபோல் இரண்டாவதாக வெளிவந்த வண்ணாரப்பேட்டையில பாடலை சிவகார்த்திகேயனும், அனிருத்தும் இணைந்து பாடி இருந்தனர். இந்த இரண்டு பாடல்களுமே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், மாவீரன் படத்தின் அடுத்த அப்டேட் ஆக இப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. மாஸ் ஆக இருக்கும் இந்த டிரைலர் தற்போது யூடியூப்பில் செம்ம வைரல் ஆகி வருகிறது. இந்த டிரைலருக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன. டிரைலர் செம்ம மாஸ் ஆக இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.

Maaveeran - Official Trailer | Sivakarthikeyan, Aditi Shankar | Madonne Ashwin | Arun Viswa

இதையும் படியுங்கள்... புரோமோவுக்கே புரோமோவா... வேறமாரி சம்பவத்துக்கு ரெடியான அனிருத் - நெல்சன் காம்போ - ஜெயிலர் அப்டேட் இதோ