சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா தி ரூல் திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு உள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். அவர் நடிப்பில் கடந்த 2021-ம் திரைக்கு வந்த திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

புஷ்பா படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. அவ்விருதை பெற்ற முதல் தெலுங்கு நடிகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. புஷ்பா படத்தின் அதிரிபுதிரியான வெற்றிக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்திற்கு புஷ்பா தி ரூல் என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இதையும் படியுங்கள்... பிரைவேட் ஜெட்; ரூ.100 கோடிக்கு சொகுசு வீடு! கோடிகளில் புரளும் புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு இதோ

Pushpa 2 The Rule Teaser | Allu Arjun | Sukumar | Rashmika Mandanna | Fahadh Faasil | DSP

இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளான இன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் புஷ்பா 2 படத்தின் மிரட்டலான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் காட்சி மற்றும் அல்லு அர்ஜுனின் ஸ்டைலிஷ் வாக்கிங் காட்சியும் நிறைந்த இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த டீசருக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. புஷ்பா 2 திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... varalaxmi : வருங்கால கணவருடன் சேர்ந்து தனது குழந்தைகளின் பிறந்தநாளை கொண்டாடிய வரலட்சுமி - பர்த்டே கிளிக்ஸ் இதோ