MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பிரைவேட் ஜெட்; ரூ.100 கோடிக்கு சொகுசு வீடு! கோடிகளில் புரளும் புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு இதோ

பிரைவேட் ஜெட்; ரூ.100 கோடிக்கு சொகுசு வீடு! கோடிகளில் புரளும் புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு இதோ

புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுன் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 08 2024, 08:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Allu Arjun

Allu Arjun

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். சிறுவயதில் இருந்து சினிமாவில் நடித்து வரும் இவர், கடந்த 2003ம் ஆண்டு வெளிவந்த கங்கோத்ரி என்கிற தெலுங்கு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து ஆர்யா, Bunny போன்ற படங்களில் நடித்து ஹாட்ரிக் வெற்றியை ருசித்தார் அல்லு அர்ஜுன். குறிப்பாக இவர் நடித்த Bunny படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் அதுவே அவரது அடைமொழியாகவும் மாறியது. அப்படத்திற்கு பின்னர் ரசிகர்கள் அவரை செல்லமாக Bunny என அழைக்கத் தொடங்கினர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Allu Arjun Birthday

Allu Arjun Birthday

தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து மாஸ் ஹிட் படங்களை கொடுத்த அல்லு அர்ஜுன், கடந்த 2021-ம் ஆண்டு திரைக்கு வந்த புஷ்பா படம் மூலம் பான் இந்தியா நடிகராக உருவெடுத்தார். சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு, அப்படத்தில் திறம்பட நடித்த நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது. தெலுங்கு திரையுலக வரலாற்றில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகர் என்கிற பெருமையையும் அல்லு அர்ஜுன் பெற்றார்.

36
Allu Arjun salary

Allu Arjun salary

புஷ்பா படத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கு பின்னர் தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தைவிட படு பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி திரைக்கு வர உள்ளது. புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுன் இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... கருப்பில் இருந்து சாக்லேட் கலருக்கு மாறிய மாயம்.. கிறங்கடிக்கும் போஸில் அசத்தும் ஸ்ருதி ஹாசன் - Latest Pics!

46
Allu Arjun Vanity Van

Allu Arjun Vanity Van

தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் முன்னணி இடத்தில் இருக்கிறார் அல்லு அர்ஜுன். அவர் ஒரு படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார். அதுமட்டுமின்றி ரூ.460 கோடி சொத்துக்கு அதிபதியாகவும் இருந்து வருகிறார் அல்லு அர்ஜுன். அவர் சினிமா மட்டுமின்றி பிசினஸிலும் கொடி கட்டிப்பறக்கிறார். அவருக்கு சொந்தமாக ஐதராபாத்தில் அல்லு ஸ்டூடியோஸ் என்கிற படப்பிடிப்பு தளமும் உள்ளது.

56
Allu Arjun Private jet

Allu Arjun Private jet

சொந்தமாக தனி விமானம் வைத்திருக்கும் நடிகர்களில் அல்லு அர்ஜுனும் ஒருவர். அதன் மதிப்பு ரூ.80 கோடி இருக்குமாம். அதோடு ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அல்லு அர்ஜுனுக்கு சொந்தமாக சொகுசு வீடு ஒன்றும் உள்ளது. அதன்மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர சகல வசதியுடன் கூடிய ஃபால்கான் என்கிற வேனிட்டி வேன் ஒன்றையும் வாங்கி உள்ளார் அல்லு அர்ஜுன். அதன் மதிப்பு ரூ.7 கோடி இருக்குமாம்.

66
Allu Arjun Net Worth

Allu Arjun Net Worth

அல்லு அர்ஜுனிடம் ஹம்மர், ரேஞ்ச் ரோவர், ஜாகுவார், மெர்சிடிஸ் போன்ற சொகுசு கார்கள் உள்ளன. ஏராளமான நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் அல்லு அர்ஜுன், ஒரு விளம்பரத்தில் நடிக்க ரூ.4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இவரை புகையிலை விளம்பரத்தில் நடிக்க அணுகியபோது, எத்தனை கோடி கொடுத்தாலும் அதில் நடிக்கவே மாட்டேன் என சொல்லி அல்லு அர்ஜுன் நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Sobhita : முத்து பதித்த ஆடையில் ஹாட் போஸ்.. கொள்ளை அழகில் மின்னும் பூவாக சோபிதா துலிபாலா - ஹாட் பிக்ஸ்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அல்லு அர்ஜுன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved