பேரன்பு சீரியல் கிளைமாக்ஸ்... ஷண்மதிக்காக கார்த்திக் எடுத்த முடிவு என்ன?
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பேரன்பு சீரியல் இந்த வாரத்தோடு முடிவுக்கு வர உள்ள நிலையில், அதன் கிளைமாக்ஸில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 3 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பேரன்பு. இந்த சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த வாரம் கிளைமாக்ஸ் ஒளிபரப்பாக உள்ளது. இப்படியான நிலையில் கிளைமாக்ஸ் வாரத்தில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது கார்த்திக், ஷன்மதி விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கும் நிலையில் ஷண்மதியின் ஆசைப்படி வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது.
ஆனால் இப்போதிருக்கும் சூழ்நிலையில் 6 மாதத்துக்கு எதுவும் செய்ய முடியாது என்று சொல்ல கார்த்திக் இதை கேட்டு விடுகிறான், இதுவரை இவளது மனது மாறாத நிலையில் உடனடியாக ஷண்மதிக்கு விவாகரத்துக்கு கொடுத்து அவளை படிக்க வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க முடிவெடுக்கிறான்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நீதிபதியிடம் பேசி விவகாரத்தையும் வாங்கி விட இறுதியில் நீதிமதி கார்த்தி தன்னை சந்தித்து பேசிய விஷயத்தை சொல்ல ஷண்மதி அவனின் காதலை புரிந்து கொள்கிறாள், இருந்தாலும் வீட்டில் இருந்து கிளம்பும் போது ராஜேஸ்வரி அவள் வெளிநாட்டில் படிக்க தேவையான ஏற்பாடுகள் செய்து வைத்திருப்பதை சொல்லி அவளை வீட்டிற்கு அழைத்து சென்று விட கிளம்புகிறாள்.
ஷண்மதி, வானதி இருவரும் காரில் சென்று கொண்டிருக்கும் போது mp மனைவி ஷண்மதியை கொல்ல வர ராஜேஸ்வரி கத்தி குத்து வாங்கி உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? கார்த்திக், ஷன்மதி வாழ்க்கையில் ஒன்று சேர போவது எப்படி என்ற காட்சிகளுடன் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. எனவே பேரன்பு கிளைமாக்ஸை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... கார்த்திக் கம்பெனிக்கே வேலைக்கு வரும் தீபா; அடுத்து நடக்கபோவது என்ன? கார்த்திகை தீபம் சீரியலில் செம்ம டுவிஸ்ட்