நினைத்தேன் வந்தாய் சீரியல் : சுடர் கழுத்தில் விழுந்த இந்துவின் தாலி.. தவிடு பொடியான மனோகரியின் மாஸ்டர் பிளான்
நினைத்தேன் வந்தாய் சீரியலில் நேற்றைய எபிசோடில் சுடர் எழில் எடுத்துக் கொடுத்த புடவையை கட்டிக் கொண்ட நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் எழில் எடுத்துக் கொடுத்த புடவையை கட்டிக் கொண்டு கீழே இறங்கி வர மனோகரிக்கு இந்து இறங்கி வருவது போலவே தோன்றிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, மனோகரி சுடரை பார்த்து இந்து இறங்கி வர மாதிரி தெரியுது என்று அதிர்ச்சி அடைகிறாள். பிறகு மீண்டும் கண்களை நன்றாக துடைத்துக் கொண்டு பார்க்க சுடர் கீழே இறங்கி வருகிறாள். சுடரை பார்த்து கனகவல்லி இந்த புடவை உனக்கு ரொம்ப அழகா இருக்கு என்று சொல்லி பூஜையில் உட்கார வைக்கிறார்.
சுடர் எழிலோட மனைவி போட்டோவ பார்க்க முயற்சி செய்ய மனோகரி போய்ட்டு எல்லாருக்கும் காபி கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டு போட்டோவில் இருக்கும் தூசியை துடைக்க போவது போல சென்று போட்டோ தீப்பற்றி எறிவது போல் செய்ய அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பற்றி எரியும் போட்டோவை எடுக்க போக கனகவல்லி தூர போப்பா என்று சொல்கிறார். கிச்சனிலிருந்து போட்டோ எரிவதை பார்த்த சுடர் ஓடி வந்து போட்டோவை எடுத்து தீயை அணைக்க அவளது கையில் தீக்காயம் ஏற்பட எழில் பதறிப் போகிறான்.
பிறகு கனகவல்லி சுடரை கூட்டிச் சென்று முதலுதவி செய்ய சொல்ல தனது தோளிலிருந்த துண்டால் சுடர் கையில் கட்டு போட்டு ரூமுக்கு அழைத்துச் சென்று மருந்து போட்டு விட்டு இந்துமதி இன்னமும் என் கூட வாழ்ந்துட்டு தான் இருக்கா அவளோட போட்டோவ தீயிலிருந்து காப்பாத்திட்ட.. இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன் என்று நன்றி சொல்கிறான்.
இதையும் படியுங்கள்... அச்சு அசல் பாட்டி மஞ்சுளா விஜயகுமார் மாதிரி இருக்கும் வனிதா விஜயகுமாரின் மகள்!
இதையடுத்து சுடர் கீழே இறங்கி வர எழில் வேறொரு துண்டை எடுத்து தோள் மீது போட்டுக் கொண்டு வர அந்த துண்டில் இந்துவின் தாலி மாட்டிக் கொண்டிருக்கிறது. இது போட்டோ பற்றி எரியுது அபசகுணம் மாதிரி தெரியுது என்று பூஜைக்கு வந்தவர்கள் சொன்ன பூசாரி இது அபசகுணம் இல்ல இதுவும் நல்லது தான் இந்த வீட்டோட திருஷ்டி மொத்தமும் அக்னி பகவானால் எரிந்து போய்விட்டது இனி எல்லாமே சுபிட்சம் தான் என்று சொல்கிறார்.
அதன் பிறகு எழில் வந்து மீண்டும் பூஜையில் உட்கார ஐயர் எழினின் துண்டை விரிக்க சொல்லி பூ பழம் உள்ளிட்டவற்றை வைத்து மொட்டை மாடிக்கு சென்று மனைவியை வேண்டிக் கொண்டே காற்றில் தூவி விடுமாறு சொல்ல எழிலும் மட்டை மாடிக்கு வந்து அப்படியே செய்கிறான். துண்டை உதறியதும் அதிலிருந்த தாலியோடு மொத்தமும் காற்றில் பறந்து வர இதே எழில் குழந்தையோடு கொஞ்சிக் கொண்டிருக்க இது தாலி நேராக சுடர் கழுத்தில் வந்து விழுகிறது. ஆனாலும் சுடர் அதை கவனிக்காமல் குழந்தையோடு விளையாடிக் கொண்டிருக்கிறாள்.
அதன் பிறகு ஐயர் அனைவருக்கும் அட்சதை கொடுக்க சொல்லி எழிலுக்கு ஆசீர்வாதம் செய்யும் போது குழந்தையின் பால் வீட்டுக்குள் உருண்டு வர அதை எடுக்க சுடர் ஓடி வர அவளும் எழிலோடு சேர்ந்து ஆசீர்வாதம் வாங்குவது போல் சூழ்நிலை மாறுகிறது. பிறகு பூஜை முடித்த ஐயர் வீட்டுக்கு கிளம்பும்போது வெளியே இருந்த சுடர் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க போக தாலி வந்து தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.
இது என்னுடைய தாலி இல்லை என்று கழட்ட போக ஐயர் கழட்டாத அந்த தாலி உன் கழுத்துக்கு வந்து இருக்குன்னா அதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கு. அந்த தாலியை கழட்டுமா தாலிக்கு சம்பந்தப்பட்டவங்களுக்கு ஏதாவது ஆபத்து வரும் என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... Anna Serial : குழந்தைகளை கடத்திய சௌந்தரபாண்டி.. தேர்தலில் ரிசல்டில் மாற்றம் வருமா? அண்ணா சீரியல் அப்டேட்