Asianet News TamilAsianet News Tamil

Anna Serial : குழந்தைகளை கடத்திய சௌந்தரபாண்டி.. தேர்தல் ரிசல்டில் மாற்றம் வருமா? அண்ணா சீரியல் அப்டேட்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டியன் குழந்தைகளை கடத்த திட்டம் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna serial June 19 today episode update gan
Author
First Published Jun 19, 2024, 3:37 PM IST

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் மற்றும் பரணி 20 நிர்வாகிகளின் மனைவியோடு உள்ளே புகுந்து சௌந்தரபாண்டியன் திட்டத்தை கொலாப்ஸ் செய்ய அவர் குழந்தைகளை கடத்த திட்டம் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, தேர்தலுக்காக நாமினேஷன் செய்யும் வேலைகள் நடக்கிறது. இதையடுத்து சௌந்தரபாண்டி சனியனிடம் குழந்தைகளை கடத்த சொல்லி ஏற்பாடு செய்ய சொல்கிறார். அடுத்து சனியனும் இன்னொருத்தனும் சேர்ந்து 20 நிர்வாகிகளின் குழந்தையையும் கடத்தி பாம் வைக்கின்றனர்.

இதையும் படியுங்கள்... இனிமேல் தான் ட்விஸ்ட்டே இருக்கு! 'பாக்கியலட்சுமி' நடிகர் சதீஷ் வெளியிட்ட வீடியோவால் எகிறும் எதிர்பார்ப்பு!

Anna serial June 19 today episode update gan

பிறகு சௌந்தரபாண்டியிடம் விஷயத்தை சொல்ல அவர் 20 நிர்வாகிகளின் குழந்தைகளை கடத்தி வைத்திருக்கும் விஷயத்தை சொல்லி தனக்குத்தான் ஓட்டு போடணும் என்று மிரட்டுகிறார். இதனால் பதறும் 20 நிர்வாகிகளின் குடும்பமும் நாங்க உங்களுக்கே ஓட்டு போடுறோம் எங்க குழந்தைகளை எதுவும் பண்ணிடாதீங்க என்று கெஞ்சி அழுகின்றனர். 

அடுத்து தேர்தல் தொடங்க 20 நிர்வாகிகளும் சௌந்தரபாண்டிக்கு ஓட்டு போடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக என்ன நடந்தது? தேர்தலில் வெல்லப்போவது யார் என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்கள்.

இதையும் படியுங்கள்... Top 10 Actors: இந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகர்கள் லிஸ்ட் வந்தாச்சு; அதில் தமிழ் ஹீரோஸ் மட்டும் இத்தனை பேரா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios