அச்சு அசல் பாட்டி மஞ்சுளா விஜயகுமார் மாதிரி இருக்கும் வனிதா விஜயகுமாரின் மகள்!
நடிகையும், சின்னத்திரை செலிபிரிட்டியும் ஆன வனிதா விஜயகுமார் தனது சமூக வலைப்பக்கத்தில் அடிக்கடி போட்டோக்களை பகிர்ந்து வரும் நிலையில், தனது மகளின் சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Jovika Vijayakumar Childhood Photos
பிக்பாஸ் தமிழ் சீசன் 7ல் கலந்து கொண்ட வனிதா விஜயகுமாரின் மகளும், நடிகர் விஜயகுமாரின் பேத்தியுமான ஜோவிகா தற்போது படங்களில் நடித்து வருகிறார். பிரபல நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா யூடியூப் சேனல் மூலமாக பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும்.
Vanitha Vijayakumar
இன்ஸ்ட்ராகிராமில் அடிக்கடி போட்டோக்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுப்பார். கடைசியாக விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 7ல் இளம் போட்டியாளராக கலந்து கொண்டார் ஜோவிகா. இவரது அம்மா வனிதா விஜயகுமார் சர்ச்சைக்கு பெயர்போனவர்.
Vijayakumar Family
தற்போது பல படங்களில் நடித்து வரும் வனிதா, 1995 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு பல படங்களில் நடித்த அவர், ஒருகட்டத்தில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.
Sridevi Vijaykumar
சினிமா நட்சத்திரங்களின் குடும்பமான நடிகர்கள் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா விஜயகுமார் ஆகியோரின் மகள் வனிதா என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். அவரது இரண்டு சகோதரிகளான ப்ரீத்தா விஜயகுமார் மற்றும் ஸ்ரீதேவி விஜயகுமார் ஆகியோரும் நடிகைகளே.
Vanitha Vijayakumar's daughter
இவர் நடிகர் அருண் விஜய்யின் ஒன்றுவிட்ட சகோதரியும் கூட. வனிதா விஜயகுமார் சில காலமாக தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையில் குறிப்பிடத்தக்க முகமாக இருந்து வருகிறார். இவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Jovika Vijayakumar Photos
இந்த நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகாவின் சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது அப்படியே அவரது பாட்டியான மஞ்சுளாவை போல உரித்து வைத்தது போல இருக்கிறார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.