கார்த்திகை தீபம் சீரியலில் நவீனை காப்பாற்றி சாமுண்டீஸ்வரியை வெளியில் கொண்டு வந்த கார்த்திக் சந்திரகலாவை அவரது அக்காவிடம் போட்டுக் கொடுத்துள்ளார்.

கார்த்திகை தீபம் சீரியல்

ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் கார்த்திகை தீபம் சீரியல் வெற்றிகரமாக 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கார்த்திக் ராஜ் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார். மேலும், வடிவுக்கரசி, வைஷ்ணவி சதீஷ், மகேஷ், காவியா, கிருத்திகா அண்ணாமலை, ஃபெரோஷ் கான், நவீன் கிஷோர், பவானி சௌத்ரி, தனலட்சுமி சிவா என்று ஏராளமான பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

தர்காவில் பிரார்த்தனை செய்த ஏ ஆர் ரஹ்மான் – வைரலாகும் வீடியோ!

இந்த சீரியலில் முதலில் ரேவதி துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற்று திரும்ப வந்தார். அதன் பிறகு துர்கா பூச்சிமருந்து குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதன் பிறகு திரும்பி வந்தார். இயக்குநரின் அடுத்த டார்க்கெட் யாருன்னு தான் தெரியவில்லை. அவரது பட்டியலில் அடுத்து ரோகிணி, காவியா ஆகியோர் தான் பட்டியலில் இருக்கிறார்கள்.

என்ன தான் சிவனாண்டி அடுத்தடுத்து சம்பவங்களில் ஈடுபட்டு ஜெயிலுக்கு சென்றாலும் எப்படியாவது ஜெயிலிலிருந்து விடுதலையாகி திரும்ப வந்து விடுகிறார். ஆரம்பத்தில் சிவனாண்டி மட்டும் வில்லத்தனம் செய்து வந்தார். அதன் பிறகு அவருக்கு பக்க பலமாக சந்திரகலா இருந்தார். பின்னர் முத்துவேல் வந்தார். அவர்களத் வில்லத்தனம் போதுமானதாக இல்லை என்று காளியம்மா என்ற ரோலில் ஃபாத்திமா பாபு வந்தார். அவரும் தன்னால் முடிந்தளவிற்கு தொல்லைகள் கொடுத்தார். ஆனால், அதிலிருந்து கார்த்திக் எஸ்கேப் ஆனது மட்டுமின்றி சாமுண்டீஸ்வரியின் குடும்பத்தையும் பாதுகாத்து வந்தார்.

குண்டை தூக்கிப்போட்ட சமந்தா, ராஜ் நிடிமோருவுடன் ரசிகர்களுக்கு ஹிண்ட்?

இந்த நிலையில் இப்போது நவீனை கொல்ல முயற்சி செய்த நிலையில் சிவனாண்டி மற்றும் முத்துவேல் இருவரும் போலீஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். முதலில் சாமுண்டீஸ்வரி தான் குற்றவாளி என்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நிரபராதி என்று வெளியில் வந்தார். அவரிடம் எப்படி உங்களது வளையல் அந்த இடத்திற்கு வந்தது என்று கார்த்திக் கேட்க, அதற்கு இங்க இருப்பவர்கள் தான் வளையலை எடுத்துக் கொண்டு சென்று அந்த இடத்தில் போட்டிருக்கலாம் என்று மயில்வாகனம் எல்லவே, அது வேறு யாருமில்லை. உங்களது தங்கை சந்திரகலா தான் என்று கார்த்திக் அவரை மாட்டிவிட்டார். அதற்கான ஆதாரத்தையும் மயில்வாகனம் காண்பித்தார்.

அதில் சந்திரகலா மற்றும் சிவனாண்டி இருவரும் பேசும் வீடியோ இடம் பெற்றிருந்தது. அதை பார்த்த சாமுண்டீஸ்வரி ஆத்திரமடையவே, சந்திரகலா அப்படியெல்லாம் இல்லை அக்கா என்று அவருடைய காலில் விழுந்துவிட்டார். அதன் பிறகு சாமுண்டீஸ்வரி மன்னித்து விட தனது ரூமிற்கு சென்றார். அடுத்த காட்சியில் கார்த்திக்கிற்கு எதிராக என்ன பிளான் செய்கிறார் என்று பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோஸ் 2 சீரியலில் நடிக்க நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?