சென்னை அண்ணாசாலையில் உள்ள தர்காவில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் பிரார்த்தனை செய்த வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

திலீப் குமார் - ஏ.ஆர்.ரஹ்மான்

திலீப் குமார் என்கிற இயற்பெயருடன் பிறந்து, இசை மீதான ஆர்வத்தால்... சிறு வயதில் இருந்தே இசை பயிற்சி எடுத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மான், ஒரு கட்டத்தில் விளம்பரப்படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு வளர்ந்தார். பின்னர், இயக்குனர் மணிரத்தினம் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மீதும், அவர் மீதும் உள்ள நம்பிக்கை காரணமாக, 'ரோஜா' திரைப்படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை கொடுத்தார். இசையமைப்பாளராக அறிமுகமான தன்னுடைய முதல் படத்திலேயே... இனிமையான இசையால் ரசிகர்கள் மனதை உருகச் செய்தார் ஏ ஆர் ரஹ்மான். மேலும், எத்தனையோ புதிய இசையமைப்பாளர்கள் வந்த போதும் இளையராஜாவின் இசையை அசைத்துப் பார்க்க முடியாத நிலையில், ஏ ஆர் ரகுமானின் இசைக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

குண்டை தூக்கிப்போட்ட சமந்தா, ராஜ் நிடிமோருவுடன் ரசிகர்களுக்கு ஹிண்ட்?

இசைஞானிக்கு போட்டியாகவும் பார்க்கப்பட்டார் ஏ.ஆர்.ரகுமான். மேலும். 'ரோஜா' படத்தில் இடம்பெற்ற, ஒவ்வொரு பாடல்களும் தற்போது வரை அதிகப்படியான ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இந்த படத்திற்காக ஏ ஆர் ரகுமான், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் வென்றார். மிகக் குறுகிய காலத்தில் தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உள்ளிட்ட பிற மொழி தென்னிந்திய படங்களிலும் இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான்... 2009 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான 'ஸ்லம் டாக் மில்லியனர்' எங்கிற ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்ததற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வென்றார். 

பாண்டியன் ஸ்டோஸ் 2 சீரியலில் நடிக்க நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கடந்த 30 ஆண்டுகளைக் கடந்தும்... 300-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து ஒவ்வொரு படங்களுக்கும் தனித்துவமான இசையை வாரி வழங்கி வரும் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை அண்ணாசாலையில் உள்ள தர்காவில் பிரார்த்தனை செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வருகிறது. ஆனால், அவர் இன்று பிரார்த்தனை செய்த வீடியோ அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரார்த்தனை செய்த வீடியோவா என்று தெரியவில்லை. காரணம், இன்று சென்னையில் விடாமல் மழை பெய்து வரும் நிலையில், எல்லா இடங்களிலும் தண்ணீர்காடாக காட்சி தரும் நிலையில் இந்த வீடியோவில் தண்ணீர் இருப்பதற்கான அடையாளம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…